அஷ்ரப் நினைவு தின உரையும் புலமைப் பரிசில் வழங்கலும்
இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மறைந்தத தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவுதினப் பேச்சும் , முஸ்லிம் ஊழியர்களது பிள்ளைகள் புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழகம் சென்றுளளவர்களுக்கு மஜ்லிசினால் புலமைப் பரிசிலில் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் அதிகார சபையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற முஸ்லிம் ஊழியர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இம் மஜ்லிசின் தலைவர் இல்ஹாம் மசூர் மொலானா அங்கு உரையாற்றுகையில் …..
மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு இலங்கை துறைமுக அதிகார சபையில் தொழில் தந்தமையால்தான் தாங்கள் திறமையாக தொழில் செய்து கைநிறைய சம்பளம் எங்களது வாழ்க்கை சீராக எடுத்துச் சென்று இந்த ஊதியத்தினால்தான் எங்களது பிள்ளைகள் கொழும்பிலும் ஊரிலும் கல்வி கற்று பொறியியலாளர்கள், வைத்தியர்களாகவும் பட்டதாரிகளாகவும் படிப்பிக்க முடிந்தது……..அதற்காக அந்த மாமனிதரை நாங்கள் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்…. தலைவர் அஷ்ரப் மறைந்த பிறகு கடந்த 24 வருடங்களில் துறைமுக அதிகார சபையின் ஒர் சாதாரன லேபர் தொழில் கூட முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை…………… அன்னாரை நாம் வருடாந்தம் நினைவு கூர்ந்து அவர் பெயரினால் இவ்வாறான புலமைப்பரிசில் திட்டத்தினை கடந்த 4 வருடகாலமாகவும் அவர் ஆரம்பித்து வைத்த துறைமுக இப்தார் நிகழ்வினையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம்……என இல்ஹாம் மௌலானா அங்கு தெரிவித்தார்
மேற்படி நிகழ்வு நேற்று 03.08.2024 கொழும்பில் உள்ள தபால் தினைக்களத்தின் கூட்ட மண்டபத்தில் இம் மஜ்லிசின் தலைவர் இல்ஹாம் மொளலானா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை துறைமுக அதிகார சபையின் ஊழியர் ஒலிபரப்பாளர் திக்குவலை சும்ரி நெறிப்படுத்தினார்…..
பிரதம பேச்சாளர்களாக முன்னாள் பா.உ ஜனாதிபதி சட்டத்த்ரின எம்.எம்.சுகைர், பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் ஜலால்டீன, முன்னாள் புனா்வாழ்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எம். நஹியா, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் மற்றும் 300க்கும் மேற்பட்ட துறைமுக முஸ்லிம் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்
(அஷ்ரப் ஏ சமத்)