திலித் ஜயவீர “சர்வஜன பலய” கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகிறார்
தாயக மக்கள் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர, “சர்வஜன பலய” வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது (04) இடம்பெற்று வரும் “சர்வஜன அதிகார” மாநாட்டில் வைத்தே, இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் தொழிலதிபர் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
