காயத்தால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஹசரங்க
இந்திய அணிக்கு எதிரானஒருநாள் தொடரின் மிகுதி இரு போட்டிகளில் இருந்தும் காயம் காரணமான இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க விலகிக் கொண்டார்.
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது தனது இறுதி ஓவரை வனிந்து ஹசரங்க வீசிய போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதிலிருந்து ஹசரங்க இன்னும் குணைமடையாத காரணத்தினார் இந்திய அணிக்கு எதிரான நாளை மற்றும் 7ஆம் திகதிகளில் இடம்பெவுள்ள 2ஆவது மற்றும் 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலிருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார்.
அதற்கமைய அவருக்குப் பதிலாக மற்றுமொரு சகலதுறை சுழல்பந்து Pச்சாளரான ஜெஃப்ரி வாண்டர்சே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் ஹசரங்க துடுப்பாட்டத்தில் 24 ஓட்டங்களையும் , பந்துவீச்சில் விராட் கோஹ்லி, ராகுல் மற்றும் குல்தீப் ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மிகுதி இரு போட்டிகளிலும் ஹசரங்க இல்லாமை இலங்கை அணிக்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
(அரபாத் பஹர்தீன்)