உள்நாடு

இலங்கைக்கு சிறந்த சுற்றுலா விருது

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB)  நேற்று ஒகஸ்ட் 02, 2024 இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024 இல் “சிறந்த சர்வதேச சுற்றுலா வாரியம்” என்ற விருதை வென்றது.

குளோபல் டூரிசம் விருதுகள் என்பது டிரெவல் வேல்ட் ஒன்லைனால் (TWO) ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர நிகழ்வாகும், இது சுற்றுலாத் துறையின் நிலப்பரப்பை வடிவமைத்து நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்த நிறுவனங்களை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு தளமாக செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *