உள்நாடு

யானைக்கும் – மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு திசைகாட்டியின் சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் வகுக்கப்பட்டு விட்டன – பேராசிரியர் சந்தன அபேரத்ன

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குழுக்களின் மத்தியில் மீன்பிடி அலுவல்கள் சம்பந்தமான தயாரிக்கப்படுகின்ற கொள்கையில் புத்தளம் மாவட்டத்தின் மீனவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களும் படகுத்துறைகளும் அழிவடைய இடமளித்தல், மீன்பிடி கருவிகளில் விலைகள் தாக்குப்பிடிக்க முடியாததாக அமைதல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் சம்பந்தமாக எங்களுடைய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மிகுந்த சிரமங்களின் மத்தியில் அறுவடை செய்து வருகின்ற மீன் விளைச்சலுக்கு நியாயமான விலை இதுவரை கிடைப்பதில்லை. அது சம்பந்தமாக அடிப்படை திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதோடு இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய சுற்றுலா தொழிற்றுறையில் சாத்தியவள கற்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றளவில் உல்லாசப் பயணிகளுக்கு வீசா வழங்கும்போது கூட கொள்ளையடிக்கின்ற ஆட்சியொன்று நிலவுகின்றது.

அதற்கு மேலதிகமாக எமது மாவட்டத்தில் இயங்கி வந்த சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு இரையாகியுள்ள கருவலகஸ்வெவ, நவகத்தேகம உள்ளிட்ட பிரதேசத்தில் நிலவுகின்ற பாரதூரமான பிரச்சினையை தீர்த்து வைக்க சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 21 ஆம் திகதி அநுர ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அபிவிருத்தித்திட்டங்கள் அனைத்தும் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *