மொட்டுவிலிருந்து யார் வெளியேறினாலும் ஆதரவாளர்கள் வெளியேற மாட்டார்கள்..! -ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பீ.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தவிர கட்சியை விட்டு வெளியேறுபவர்களினால் வாக்குகளை பெற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று முன்தினம் (31) தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்றும், அந்தக் குழுவில் சிலர் இன்னமும் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பு மஹிந்த ராஜபக்ஷவின் படத்தை எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்கு வந்ததாகத் தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குத் தளம் மஹிந்த ராஜபக்ஷ மீது இருப்பதால், மக்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றும், வெளியேறுபவர்கள் 200, 500 அல்லது 1000 வாக்குகளை எடுத்துச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
யார் சென்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழ்ந்துவிடாது எனவும், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஜே.வி.பி நாட்டை நிர்வகிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்குச் சென்ற சஜித் பிரேமதாசவை அடித்து விரட்டிய போது ஆஷு கூறுவது போல் 17 கூடாரங்களை அடித்து நொறுக்கிய போராட்ட மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியதாகவும், வரியைக் குறைத்த ஜனாதிபதியை அடித்து விரட்டி வரியை உயர்த்த ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மக்கள் கட்சியை விட்டு வெளியேறியதற்கான காரணம் மக்களுக்குத் தெரியும் என்றும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்திருந்தால், அவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் சென்றிருப்பார்கள் என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.
15 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்குகளை பெறக்கூடிய வேட்பாளரையே தமது கட்சி முன்வைக்கும் என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.