நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
வீழ்ச்சி கண்டுள்ள தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஓர் தாய் தந்தையரின் பிள்ளைகளாக ஒன்றிணைய வேண்டும். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தில் முரண்பாடுகளை உருவாக்காமல் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் நட்புடன் இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 373 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன
கொழும்பு 6, திபிரிகஸ்யாய இந்து மகளிர் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 24 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நாட்டில் இலவசக் கல்வியில் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளை தனது சொந்த பிள்ளைகளாகவே கருதுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சகல பாடசாலைகளிலும் ஆங்கில மொழியிலான ஆய்வு கூடம் மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை நிறுவி முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.