ஜனாதிபதித் தேர்தல்: ஆதரவுக் கணிப்பில் சஜித் முன்னிலையில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில், சுகாதாரக் கொள்கை நிறுவகம் (IHP) நடத்திய ஆய்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (01) வரை முன்னிலையில் உள்ளார்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு இன்று (01) வரை 43 சத வீத ஆதரவு கிடைத்து முன்னணியில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 30 சத வீதமான ஆதரவு இருப்பதாக, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாகவும் சுகாதாரக் கொள்கை நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்த ஆதரவு, 20 சத வீதமாகக் காணப்படுவதாகவும், சுகாதாரக் கொள்கை நிறுவகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )