மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ” சிறுவர் பிரச்சினைகளை அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய நன்னெறி முறை” தொடர்பான வதிவிட செயலமர்வு..!
“சிறுவர் பிரச்சினைகளை அறிக்கையிடும்போது பின்பற்ற வேண்டிய நன்னெறி முறை” என்ற தலைப்பில் ,மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தேரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு கல்லடியில் கிரீன் கார்டன் ஹோட்டலில் (29,30,31)நடைபெற்றது.
இப் பயிற்சியின் ‘எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாத்தல்’ (PEaCE) அமைப்பு UNICEF நிதி உதவியுடன் ஏற்பாடு செய்திருந்தது.
இப் பயிற்சியில்
சிறுவர் உரிமை சமவாயம் ,
சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய ஊடகங்களின் தாக்கம் ,
சிறுவர் வன்முறைக்கு எதிராக புகாரளித்தலில் உள்ள சட்டம் மற்றும் நெறிமுறைகள்,
சிறுவர் வன்முறைக்கு எதிரான செய்தி அறிக்கை ,
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களை நேர்காணல் ,
நேரலை சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல பயன் தரும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இச் செயலமர்வில் வளவாளர்களாக அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் மஹ்ரூப், கலாநிதி எம்.ஸி. றஸ்மின்,டொக்டர் சஹாரா தர்சனி ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)