கண்டி மோப்ரே கல்லூரியின் டெங்கு ஒழிப்பு ஊர்வலம்..!
சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப் பாட்டுப் பிரிவின் செயற்பாட்டுக்கு அமைவாக கண்டி மோப்ரி கல்லூரியின் ஏற்பாட்டில் மற்றும் குண்டசாலை சுகாதார வைத்தியர் அலுவலகம் , பிரதேச பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் மோப்ரி கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது குண்டசாலை சுகாதார வைத்தியர் அலுவலகர் வைத்தியர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள், தாய் சேய் மருத்துவ தாதிமார்கள், ரஜவெல இந்துக் கல்லூரி, கெங்கல்ல தேசிய பாடசாலை மாணவர் மாணவிகள் இந்த ஊர்வலத்தின் போது கலந்து கொண்டனர்
டெங்கு இல்லாத நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளுக்கு இணங்க டெங்கு நோயின் தாக்கம் தொடபிலான பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் இந்த ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
இந்த நடைபவணிப் பேரணி கெங்கல்லை தேசிய பாடசாலை மைதானத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் திகன வரை சென்று மீளவும் குண்டசாலை சுகாதார வைத்திய அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது.
(இக்பால் அலி)