உள்நாடு

இஸ்மாயீல் ஹனியே படுகொலை; சஜித் கண்டனம்…!

பலஸ்தீன் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயீல் ஹனியேயின் படுகொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயலென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் இதன் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளை நம் நாடு சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமைதியின் செய்தியே தேவைப்பட்டாலும், தொடர்ச்சியாக பதிவாகும் இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல்களின் விளைவுகளை அப்பகுதியும் ஒட்டுமொத்த உலக மக்களும் அனுபவிக்க வேண்டியுள்ளமை வருத்தமளிக்கிறது.

எனவே, இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதிக்காக உலக நாடுகள் அனைத்தும் முன்நிற்க வேண்டும். மனித நேயத்தை மதிக்கும் தலைவர்களாகிய நாம் இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு விரைவான மற்றும் நிலையான போர் நிறுத்தம் மற்றும் அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *