உள்நாடு

அப்பட்டமான மனித உரிமை மீறல்..! -ஹனியா படுகொலைக்கு றிஷாத் கண்டனம்

தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்துநின்ற பலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்சனத்தின் வெறியர்களின் முகங்களை காட்டுகின்றது. இப் படுகொலைகளை மனிதத்துவம் கொண்ட எவராலும் அங்கீகரிக்க முடியாதுயென என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளர்.

அத்தோடு, ஆக்கிரமிப்பினை மட்டும் கொண்டு ஹமாஸ் மக்களையும் சிறுவர்களையும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் என பாராது கொடூரமான முறையில் கொன்றொழிக்கும் இஸ்ரேலின் இந்த செயலை நான் பிரதி நிதித்துவம் செய்யும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸானது வண்மையாக கண்டிக்கின்றது எனவும் தெரிவித்தார்

இது தொடர்பில் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை – பலஸ்தீன உறவு என்பது பல ஆண்டுகள் நெருக்கமானது இந்த உறவானது எம்மில் இருந்து பிரிக்க முடியாததொன்று என்பதால் தான் நாம் இழப்புக்களின் வேதனையை உணர்கின்றோம். பலஸ்தீனத்தின் போராட்டம் என்பது உலகலாவிய வல்லரசுகள் கூட நியாயம் கண்டுள்ள நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து கட்டுக்கடங்காது, காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அம்மக்களை மேலும் பல இழப்புக்களுக்குள் தள்ளிவருகின்றது.

அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக இந்த படுகொலை காணப்படுவதாகவும், எல்லை மீறும் இஸ்ரேலின் இந்த மோசமான மனித படுகொலைகளை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டுவதுடன், இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் மர்ஹூம் இஸ்மாயில் ஹனியாவின் மறைவுக்கு எமது கட்சி ஆழ்ந்த கவலையினை வெளிப்படுத்துகின்றது. அதே போல் சஹீதுடைய அந்தஸ்தினை எல்லாம் வல்ல அல்லாஹூ த்தா ஆலா அவருக்கு வழங்க பிரார்த்தனை செய்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *