அக்குறனை றஹ்மானிய்யஹ் அரபுக் கலாசாலையின் முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்வு
அக்குறனை றஹ்மானிய்யஹ் அரபுக் கலாசாலையின் முஹர்ரம் மாத சிறப்பு வைபவம் நேற்று (30) மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிர்வாகசபையின் ஆலோசனையுடன், அதிபர் அஷ்ஷைக் எஸ்.எம்.எம்.ஸிராஜ் (றஹ்மானி) உட்பட உஸ்தாத்மார்களின் மேற்பார்வையில் விடுகை வருட மாணவர்களினால் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக அக்குறனை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ஏ.எம்.ஸியாம் (யூஸுபி) கலந்து சிறப்பித்தார்.
ஹிஜ்ரத்தின் வரலாறும் படிப்பினைகளும், கண்ணீர் காவியம் கர்பலா போன்ற தலைப்புக்களில் மாணவர் உரைகளும், கஸீதா, கவிதை போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்புப்பேச்சாளராக கலந்து சிறப்பித்த அக்குறனை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ஏ.எம்.ஸியாம் (யூஸுபி) அவர்களுக்கு நிர்வாகம், அதிபர் உட்பட உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கல்லூரி நிர்வாகசபையின் செயலாளர் அஷ்ஷைக் அஜ்மல் முளப்பர் (றஹ்மானி) இனால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், 2024 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணைப்பரீட்சையில் ஒவ்வொரு வகுப்பிலும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கும், அதிகூடிய சராசரி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.