உள்நாடு

அமைப்பு மாற்றத்துக்கான தேசிய மாநாடு 2024 சட்ட சீர்திருத்தம்.சிவில் சமூகத்தினரை தெளிவூட்டும் செயலமர்வு..!

அமைப்பு மாற்றத்துக்கான தேசிய மாநாடு -2024 சட்ட சீர்த்திருத்தம் என்னும் தொனிப் பொருளில் அரசியல் அமைப்பின் மீள் திருத்தம் தொடர்பாகவும்,அதற்குள் உள்வாங்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பில் சிவில் சமூகத்தினரை தெளிவூட்டும் செயலமர்வொன்று செவ்வாய்க் கிழமை ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள மொனோரிச் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதனை சட்டதரணிகள்,புத்தி ஜீவிகள்,துறைசார்ந்தவர்கள்,சிவில் சமூகக் குழுக்களின் பிரதி நிதிகளை கொண்ட அமைப்பு ஓழுங்கு செய்திருந்தது.

5 தலைப்புக்களில் தயாரிக்கப்பட்ட திருத்தம் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவைகள் கலந்துரையாடல்களுக்குட்படுத்தப்பட்டன.

அரசியலமைப்பு நிர்வாகம் மற்றும் பிரதி நிதித்துவத்தை நவீன மயப்படுத்தல் தலைப்பில் முன்னாள் யுனஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த கலாநிதி பிரதீப் என் வீரசிங்க ஆகியோர் இதன் போது முன் வைத்தனர்.

இரண்டாவது பொதுச் சபை நிறுவுதல் தொடர்பில இதன் போது கருத்து முன் வைக்கப்பட்டது,அதாவது பிரதி நிதித்துவ ஜனநாயகத்தில் உள்ள குறைபாடுகளைப்பற்றி வெளிப்படுத்துவதற்கென இரு பகுதிகள் அமைப்பில்,ஒரு வரிசைப்படுத்தல் சபையை ஏற்படுத்தி சட்டம் இயற்றும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளல்,இலங்கைக்கான அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான பரிந்துறையினை வழங்குதல்.இலங்கை அரசியலில் நேரடி ஜனநாயகக் கருவிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தல் ( கோறிக்கை மனு மூலம் அதிகாரத்தை திரும்பப் பெறல்) என்ற கருத்தாடல்களின் மூலம் கூடிய கவனம் செலுத்தும் வகையில் இதனை அரசியல் சீர்த்திருத்தத்தில் இணைப்பதன் சாத்தியபாடுகள் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

நீதித் துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தி பின்வரும் ஆலோசனைகள் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.நீதித் துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள்,மேன் முறையீட்டு நீதிமன்றங்களை மேலும் பரவலாக்குவதற்கான பரிந்துரைகள்,சட்ட மா அதிபர்,அரச வழக்கறிஞர்கள்.பொது பாதுகாவலர் ஆகியோரின் கடமைக்கான் பரிந்துரைகள்,மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கான பரிந்துரைகள் என்பனவற்றின் செயற்பாட்டு ரீதியான தாங்கள் தொடர்பில் அமெரிக்காவினை தலைமையகமாக கொண்டு இயங்கும்,Leagal Global Consultancy திட்ட சிரேஷ்ட முகாமையாளர் பேராசிரியர் கலாநிதி லக்ஸ்மன் மதுரசிங்கவும்,இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் போது,இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான சட்டங்ளை வலுப்படுத்தவும்.பொருளாதார முதலீட்டு துறையில் செயல் திறன் மற்றும் உலகலாவிய போட்டி திறனை மேம்படுத்தவும்,விசேட மாகாண உயர் நீதிமன்றமொன்றை நிறுவுதல்,பொறுப்புக் கூறல் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்த பரிந்துரை செய்தல்,உள்ளிட்ட மேலும் பல காரணங்கள் தொடர்பில் இதன் போது ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

இதே வேளை அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடகம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தல் சம்பந்தமாக அரசாங்கத்துக்கு சொந்தமான ஊடகங்களை பொது சேவை ஊடகத்துறைக்கு மாற்றுதல் ,இலங்கையில் சுதந்திர ஒளிபரப்பு ஆணையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான சட்டம் இயற்றுதல்,நீதி அதிகாரத்தை வலுப்படுத்தல்.அடிப்படை உரிமைகளை வலுப்படுத்தல்,தனிமனித சுதந்திரத்தை பாதுகாத்தல் ,சட்டத் தீர்ப்பில் சமத்துவத்தை ஊக்குவித்தல் என்பனவற்றிற்கான மும்மொழிவுகள்,சுதந்திர கருத்து வெளிப்பாட்டுக்கு அதிகாரமளித்தல் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும்,சுதந்திர உரையாடலை மேம்படுத்தல்,கட்டுப்பாட்டு பேச்சு சட்டங்களை இரத்து செய்ய வாதிடுதல் எனபன புதிய திருத்தங்களுக்குள் உள்வாங்கும் வகையில் அறிக்கை தயாரிப்பதன் அவசியம் பற்றி இதன் போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் இதழியல் கற்கைத் திணைக்களத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி அனுாசா சிவலிங்கம் விளக்கத்தினை வழங்கினார்.

அடுத்த தலைப்பான தொழிலாளர் சட்ட தீர்த்திருத்தங்கள் என்னும் தலைப்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தனியார்,கூட்டுறவு சட்ட,சட்டத்துறையின் விரிவுரையாளர் பேராசிரியர் ஏ.சர்வீஸ்வரன்,விளக்ககமளித்தார்,

இந்த நிகழ்வில் டிரான்ஸ் பேரன்ஸ்ஸி இன்டர்நேசனல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் நதீசானி பெரேரா,கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல்,விஞ்ஞான முன்னாள் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ,ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆகியோர் அரசியல் சீர்த்திருத்தம் தொடர்பில் இதன் போது குறிப்பிட்டனர்.

பிரதம உரையினை கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை டீன் பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவ நிகழ்த்தினார்.

இதன் போது அரசியலமைப்புக்குள் உள்வாங்க பரிந்துரை செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பிலான கையேட்டு பிரதியொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள்,துறைசார்ந்தவர்கள் என பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

 

(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *