உள்நாடு

பதுரியா ஆரம்ப பாடசாலையின் சிறுவர் சந்தை

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவினரின் சிவறுர் சந்தையொன்று கல்லூரி அதிபர் ஏ. எல் .ஏ ரஹ்மானின் தலைமையில் கல்லூரி மைதானத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப பிரிவு உப அதிபர் எம் .என்.எப்.சாஹிரா மற்றும் பிரதி அதிபர் எம்.வை.எப். ஜென்னா ஆகியோரின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக  மாவனல்லை கல்வி வலயப் பணிப்பாளர் நிரோஷா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற ஆரம்ப பிரிவு மேற்பார்வை ஆலோசகர், ஆசிரியை யூ.எல். ஐதுன்நிஸா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஜே.எம். முஸ்தாக், பழைய மாணவர், மாணவியர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *