விளையாட்டு

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய தொடர் இலங்கையில் இடம்பெற்றுவரும் நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வருகின்றது. அதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பிக்கின்றது.

இத் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்க இத் தொடரில் பங்கேற்கவுள்ள ரோஹித், கோஹ்லி மற்றும் குல்தீப் போன்ற முன்னனி வீரர்கள் இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்தனர். அந்தவகையில் சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி இன்றைய தினம் (30) அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய புதிய அணித்தலைரான நியமிக்கப்பட்ட இடதுகைத் துடுப்பாட்ட வீரரான சரித் அசலங்கவுடன் துடுப்பாட்ட வீரர்களான பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனஹே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய பெயரிடப்பட்டுள்ளனர். அதேபோன்று பந்துவீச்சு வரிசையில் வேகப்பந்துவீச்சாளர்களாக மதீஷ பத்திரன, டில்சான் மதுசங்க மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரும் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன ஆகியோருடன் அனுபவ சுழல்பந்து வீச்சாளரான அகில தனன்ஞயவும் ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் மேலதீக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரிக்ரமவுடன் சகலதுறை வீரர்களான சம்மிக கருணாரத்ன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் இக் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கை ஒருநாள் குழாம்

சரித் அசலங்க (தலைவர்), குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்க, வனிந்து ஹஸரங்க, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஸன, டில்சான் மதுசங்க, அகில தனன்ஞய. மதீஷ பதிரன, அசித பெர்னாண்டோ.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *