முன்னாள் நிதி அமைச்சர் எம்.எம்.முஸ்தபா நினைவு முத்திரையும், பாராளுமன்ற உரை அடங்கிய நூலும் வெளியீடு
நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் மர்ஹும் அல்ஹாஜ். எம். எம். முஸ்தபா அவர்களின் நினைவாக அன்னாருக்கு நூறு வயதையடைந்திருக்கும் இத்தருணத்தில் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் வண்ணம் தபால் திணைக்களம் நினைவு முத்திரையும் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அவரது குடும்ப உறுப்பிணர்கள் மற்றும் ஜனாதிபதி மற்றம் அரசியல்வாதிகள் அடங்கிய உரைகள் நுாலும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இவ் வைபவத்தினை முஸ்தபா பௌன்டேசன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முஸ்தாவின் புதல்வர்கள், புதல்விகள், மற்றும் பேரப் பிள்ளைகள் அடங்கிய முஸ்தபா பௌன்டேசனால் இவ் வைபவம் எற்பாடு செய்யப்ட்டிருந்தது. ஜனதிபதியின் சார்பாக பிரதம மந்திரி தினேஸ்குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன ,நிதி யமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, பவித்ரா வண்னியராச்சி, வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்களான வஜிர அபேவர்த்தன, பைசால் காசீம் உட்பட முஸ்தபாவின் குடும்ப உறவினர்கள் பலநாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்
இங்கு முஸ்தபா பற்றிய பிரதான உரை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ் ,ஆற்றினார் முன்னாள் அமைச்சர் முஸ்தபா சார்பாக நவாஸ் முஸ்தபா மற்றும் பேரரான கலாநிதி செஹான் முஸ்தபாவும் உரையாற்றினார்கள்.
முதல் தபால் உரைய அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பிரதம மந்திரிக்கு கையளிக்கப்பட்டு குடும்ப உறுப்பிணர்களுக்கு வழங்கப்பட்டது.
1924ம் வருடம் பேரும், புகழும் பெற்று விளங்கிய வன்னிமைக் குடும்பத்தில் பிறந்த முஸ்தபா அவர்கள் 1942ம் வருடம் கேம்பிறிஜ் சீனியர் பரீட்சையில், 1943ம் வருடம் லண்டன் மெற்றிக்கு லேசன் பரீட்சையில் சித்தியடைந்து 1944ம் வருடம் இலங்கை சட்டக்கல்லூரியில் பிரவேசித்து 1947ம் வருடம் London Inter Law பரீட்சையில் சித்தி பெற்று 1948ம் வருடம் சட்டக் கல்லூரியிலிருந்து புறக்டராக வெளியேறினார். கல்முனையில் பிரபலமிக்க கேற் முதலியார் எம். எஸ். காரியப்பர் அவர்களது மகள் உம்மு சஹீதாவை திருமணம் செய்துகொண்டார்.
1956ம் வருடம் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகி அக்கட்சியின் பிரதம கொறடாவாக பணியாற்றினார். 1959ம் வருடம் கலாநிதி W. தஹாநாயக்க அவர்களது அரசாங்கத்தில் பிரதி நிதியமைச்சராகவும் பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார்.
1965ம் வருடம் தொடக்கம் 1977வரை அப்போதைய நிந்தவூர் தொகுதியில் போட்டியிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் உதவி சமுக சேவை அமைச்சராகவும், பிரதி நிதியமைச்சராகவும் இருந்தார்.
சிறந்த பேச்சாற்றலும், ஆளுமையும் கொண்ட மர்ஹும் முஸ்தபா அவர்கள் 1956ம் வருடம் சிங்களம் மட்டும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக தமிழரசுக் கட்சியினால் காலிமுகத் திடலில் நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்ட ஒரேயொரு முஸ்லிம் இவரேயாவார்.
இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், ஐக்கிய இலங்கையில் அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழவேண்டும் என்றளகொள்கையில் தீவிரம் காட்டிய முஸ்தபா அவர்கள் 1988ம் வருடம் தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் – முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றிக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது காலஞ்சென்ற அமைச்சரான பதியுதீன் மஹ்மூத் அவர்களின் தலைமையில் மற்றும் பிரமுகர்களுடனும் கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைத்தார்.
நிந்தவூர் மக்களும், அயலக கிராமத்தவர்களும் ஏன் முழு கிழக்கு மாகாணமுமே நேசித்த மூத்தளஅரசியல்வாதி, மானுட நேயமும், சிறந்த பண்புகளும், இரக்க சிந்தனையும் உடையவராக திகழ்ந்த எம். எம். முஸ்தபா அவர்கள் காட்டிச்சென்ற இன ஐக்கியம், ஏனைய சமுகத்தவரையும் நேயமுடன் நேசிக்கும் பக்குவம் போன்றவை என்றும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய மாண்புகள் மிக்க முஸ்தபா அவர்களுக்கு அவரது நூறாவது பிறந்த தினத்தில் நினைவு முத்திரையும், அவரது பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூலும் வெளியிடுவதானது நிந்தவூர் மண்ணுக்கும், முஸ்லிம் சமுகத்திற்கும் பெருமையுடையதாகும்
(அஷ்ரப் ஏ சமத் )