அக்கரைப்பற்று செய்த்தூனா அல் அஹ்சா அஹதியா அரபுக்கல்லூரியின் முதலாவது மௌலவியா பட்டமளிப்பு விழா..!
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அமைந்துள்ள செய்த்தூனா அல் அஹ்சா அஹதியா அரபுக்கல்லூரியின் முதலாவது மௌலவியா பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அஸ்-ஷெய்க் கே.எல்.நைசர் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்ககலைக்கழக இஸ்லாமிய கலாச்சார பேராசிரியர் அஸ்-ஷெய்க் எஸ்.எம்.எம்.மசாகிர் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு அரபு மொழியும் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் நெறியும் (டிப்ளோமா) பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவியர்களுக்கான பட்டங்களை வழங்கிவைத்தார்.
பாடசாலைகளில் கற்றுக்கொண்டிருக்கும்போதே மாணவிகள் இந்தக்கல்லூரியில் சேர்ந்து மார்க்ககல்வியிலும் பயிலக்கூடியவகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவிகள் தரம் ஆறிலிருந்து கபொத உயர்தர வுகுப்புவரை தமது பாடசாலைக் கல்வியோடு மார்க்கக்கல்வியையும் கற்கின்றனர்.
தற்போது எட்டு வருடங்களாக பகுதி நேர பயிலுனர்களாகப் பயின்று மௌலவியா பட்டத்தைபெற்றுக்கொண்ட மௌலவியாக்கள் இன்று சர்வகலாசாலைகளில் உதவி விரிவுரையாளர்களாகவும்,, சர்வதேச ஆங்கில பாடசாலைகளிலும், கிராமசேவகர் களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் சேவையாற்றி வருகின்றமை பற்றியும் அதிபர் அஸ்-ஷெய்க் கே.எல்.நைசர் (நளீமி) குறிப்பிட்ட்டார்.
பிரதம அதிதி கலாச்சார பேராசிரியர் அஸ்-ஷெய்க் .மசாகிர் பெண்கள் உலக அறிவோடு மார்க்கக்கல்வியையும் பெற்றுகொள்வது இன்றைய காலகட்டதிற்கு மிகவும் அவசியமானதும் தேவையுமாகுமென்றும். இப்பணி தொடரவேன்டும் என்றும் குறிப்பிட்டார்.
விசேட அதிதியாக கலந்துகொண்ட தற்போது வெளிநாடு கம்பனி பணிபுரியும் இக்கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் அஸ்-ஷெய்க் ரபீஸ் ஏ அசீஸ், தலைவர் அசீஸ் ரிபாஸ் மற்றும் அதிபர் அஸ்-ஷெய்க் கே.எல்.நைசர் (நளீமி) ஆகியோர் இக்கல்லூரிக்கு ஆற்றி வரும் சேவைகளை பாராட்டி பொன்னாடைபோர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
வைபவ இறுதியில் பிரதம அதிதி தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கலாச்சார பேராசிரியர் அஸ்-ஷெய்க் எஸ்.எம்.எம்.மசாகிரும் இக்கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் அஸ்-ஷெய்க் ரபீஸ் ஏ அசீசால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
(எம்.எ. பகுர்டீன்)