ஜமாஅத்தே இஸ்லாமியின் வாழைச்சேனை கிளை ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு…!
வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து முதல்தடவையாக மூன்று மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்டதையும் கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்து அதிகாரியையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு வாழைச்சேனை ஹைராத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வாழைச்சேனை மன்றம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு மன்றத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.அன்ஸார் தலைமையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பிரதேச பாடசாலை அதிபர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றார், வாழைச்சேனைஹைராத் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மருத்துவ துiறுக்கு வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஒரே தடவையில் மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டது வரலாற்றில் முதல் தடவை அதில் முஹம்மட் அன்வர் ஜாவிட் அப்தர், நாஸ்லின் முஹம்மட் ரிம்ஜத், அஹமட் லெப்பை முஹம்மட் அப்ஸர் ஆகியோரும் கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து ஓட்டமாவடி கோட்ட கல்வி அதிகாரியாக பெறுப்பேற்றுள்ள ஏ.எம்.தாஹிர் ஆகியோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)