அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கத்தில் நடைபெற்ற பலஸ்தீன மக்களுக்கான துஆப்பிராத்தனையும், ஈரான் ஜனாதிபதி ரயீசி அவர்கள் பற்றிய நினைவுப்பேருரையும்..!
பலஸ்தீன மக்களுக்கான துஆப்பிராத்தனையும் அண்மையில் காலஞ்சென்ற ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி ஆஸ்-ஷஹீத் செய்யித் இப்ராஹீம் ரயீசி அவர்கள் பற்றிய நினைவுப்பேருரையும் அன்னாரின் ஆத்ம சாந்திக்கான துஆவும் அண்மையில் அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கத்தில் நடைபெற்றது
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பன்நூலாசிரியர் மௌலவி எ.ரபியுதீன் ஜமாலி தலைமை தாங்கினார்
நிகழ்விற்கு முன்னர் பிரதம பேச்சாளர்களாராகக்கலந்து கொண்ட ஈரானின் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக பணிப்பாளர் எஸ்.இசட்.மிர்பற்ரெமி மற்றும் அகில இலங்கை ஜெம்மியதுள் உலமா சபையின் அம்பாறை மாவட்ட தலைவர் அச்ஷெய்க் ஐ எல் ஹாஷிம் சூரி (மதனி, ரியாதி), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி உனைஸ் பாரூக், உலமாக்கள், மற்றும் கல்விமான்கள் என பலரதரப்பட்ட்டோரும் கௌரவ அதிதிகளாக றபான் பைத் முழக்கத்துடன் ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்
முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகதின் இலங்கக்கியக்கான பணிப்பாளரும் பிரதிநிதியுமான எஸ்.இசட்..மிர்பற்றெமி ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி ஆஸ்-ஷஹீத் செய்யித் இப்ராஹீம் ரயீசி அவர்கள் பற்றிய நினவுப்பேருரையை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து அச்ஷெய்க் ஐ எல் ஹாஷிம் சூரி (மதனி, ரியாதி) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி உனைஸ் பாரூக், இரங்கலுரைகளும் இடம்பெற்றன..
பிரதம அதிக்கு நினைவுச்சின்னம் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் செயலாளர் இப்ரான்சா பௌருதீனால் வழங்கப்பட்டது. இதனையடுத்து சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தினரால் வெகுஜன ஊடகம் தொடர்பாக இளைஜர்கர்களுக்கென நடாத்தப்பட்ட பயிசிப்பட்டறையில் கலந்துகொண்டோருக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை மிகவும் திறம்பட ஒழுங்குசெய்த மையத்தின் இளைஞ்சர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன. வைபவ இறுதியில் விசேட துஆப்பிராதனையும் நட்டதப்பட்டன…
பட விளக்கம்:
ஈரானின் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக பணிப்பாளர் எஸ்.இசட்.மிர்பற்ரெமிமற்றும் அதிதிகள் பக்கீர் பயத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுவதையும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி ஆஸ்-ஷஹீத் செய்யித் இப்ராஹீம் ரயீசி அவர்கள் பற்றிய நினவுப்பேருரை நிகழ்த்து வதையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி உனைஸ் பாரூக், சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்குவதையும் படங்களில் காண்க.
(பகுர்)