புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கை
புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட விளையாட்டு கலாச்சாரத்தை மீண்டும் புத்துயிரூட்ட ஸாஹிரா பழைய மாணவர் குழுக்கள் அணி சேர்ந்து வருகின்றனர்.
கல்லூரி மாணவர் வொலி போல் அணியை, பழைய மாணவர்களை உள்ளடக்கிய “டேஷ் கேம்” அணிகளை பயிற்றுவித்து பலப்படுத்தவும், புத்தளம் நகருக்கே உரித்தான பீல்ட் கேம் மற்றும் பல்வகைமை கொண்ட கரப்பாந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் விஷேட கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.
ஸாஹிரா பழைய மாணவர் குழுக்கள் மத்தியில் சுற்றுப்போட்டிகளை நாடாத்தி எதிர்வரும் காலத்தில் ஸாஹிரா வாளாகத்தில் கரப்பாந்தாட்ட அரங்கை நிர்மாணிப்பதற்கான பணிகளை முன்னெடுக்கவும் தீர்மாணிக்கப்பட்டது.
சாஹிரா பழைய மாணவர் குழுக்களின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்த இந்த சந்திப்பின் அடுத்த நகர்வாக கல்லூரியின் அதிபர் தலைமையில், ஏனைய எல்லா பழைய மாணவர் குழுக்களையும் உள்ளடக்கிய சாஹிரா வொலிபோல் அமைப்பு உருவாக்கத்துக்கான முன்மொழிவும் செய்யப்பட்டது.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் , கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)