உள்நாடு

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம்; யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தேர்தல்கள் ஆணையாளர் உறுதி

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவோம். இதில் யாரும் எவ்வித அச்சம் கொள்ளவோ சந்தேகப்படவோ தேவையில்லை” என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

நேற்று (28) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, “நீதித்துறை சட்டத்தில் இடம் கொடுக்குமாயின் வாக்களிப்பு நிலையத்தை, வாக்காளர் இருக்கும் இடத்திற்கே எடுத்துச் செல்ல தேர்தல்கள் ஆணையகம் தயார் நிலையில் உள்ளது.

இதன்படி, சிறைச்சாலை, துறைமுகம், விமான நிலையம், வைத்தியசாலை போன்ற அத்தியவசிய சேவை நிலையங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைத்து, அதற்கான சகல வசதிகளையும் அங்குள்ள வாக்காளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

தேர்தல் பணிகள் செயற்பாடுகளின்போது, தேர்தல்கள் ஆணைக்குழு சம்பந்தமாக, சந்தேகத்திற்கிடமான எதுவித கருத்துக்களையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். ஜனாதிபதித் தேர்தல் நம்பிக்கையான, நேர்மையான முறையில் திட்டமிட்டபடி நடக்கும்” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *