ஓகஸ்போர்ட் பல்கலையின் வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் போட்டி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகழ் பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு போட்டியிட உள்ளார் ஒக்ஸ்போர்ட் பட்டதாரியான சிறைவாசம் அனுபவித்து வரும் இம்ரான் கான் 21 வருட காலம் பதவி வகித்து ஓய்வு பெறும் பட்டன் பிரபு வின் இடத்துக்கே போட்டியிட உள்ளதாக இம்ரான் கானின் சர்வதேச ஆலோசகர் ஷேக் சுல்பி புஹாரி தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்த வண்ணம் இம்ரான் கான் இப்பதவிக்கு போட்டியிடுகின்றார் இப்பதவிக்கு பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்களான தோனி பிளேயர், போரிஸ் ஜொன்சன் ஆகியோரும் போட்டியிட உள்ளார்கள் இம்ரான் கான் 1972 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ட்ரிபிள் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடங்களில் பட்டம் பெற்றார் 1977-இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கிரிக்கெட் அணி தலைவராகவும் பணிபுரிந்தார் இம்ரான் கான் வேந்தர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென பொது மக்களின் பலத்த வேண்டுகோள் இருப்பதாக இம்ரான் கானின் சர்வதேச ஆலோசகர் புஹாரி தெரிவித்தார்.