புதிய தலைவர்களுடன் இலங்கை மற்றும் இந்திய அணி மோதும் முதல் போட்டி இன்று
சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவுவு 7 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய இரு தொடர்களில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் இன்று ஆரம்பிக்கின்றது. இவ்விரு அணிகளுக்கும் புதிய தலைவவர்கள் தத்தமது அணியை வழிநடாத்தவுள்ளனர்.
அதற்கமைய இலங்கை அணி 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் தோற்று வெளியேறியிருக்க அணியின் தலைராக செயற்பட்ட வனிந்து ஹசரங்க தலைமைப் பதவியை இராஜனாமாச் செய்திருந்தார். அதற்கமைய இலங்கை ரி20 அணியின் புதிய தலைவராக இடதுகை மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டார்.
அதேபோன்று 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரை இந்திய அணி வெற்றி கொண்டதைத் தொடர்ந்து அணியின் தலைவராக செயற்பட்ட ரோஹித் சர்மா ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தமையால் இந்திய அணியின் புதிய தலைவரான அதிரடி வலதுகைத் துடுப்பாட்ட வீரரான சூரியக்குமார் யாதவ் பெறுப்பேற்றுள்ளார்.
ஆகவே இரு அணியும் இளம் தலைமைத்துவத்துடனும் , இளம் வீரர்களுடனுமே இத் தொடரில் களம் காண்கின்றது. மேலும் இதுவரையில் இவ்விரு அணிகளும் 29 ரி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 19 போட்டிகளிலும்இ இலங்கை அணி வெறும் 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன. இரு அணிகளும் இறுதியாக கடந்த 2023 ஜனவரியில் மோதியிருந்தன. அதன் பின் ஒன்றரை ஆண்டுகளின் பின் இரு அணிகளும் ரி20யில் சந்திக்கின்றன.
எனவே விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாத போட்டியினை இரு நாட்டு ரசிகர்களும் இன்றைய தினம் காணலாம். மேலும் 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகள் முறையே நாளை மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் இதே மைதானத்தில் இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.