விளையாட்டு

தாருல் தவ்ஹீத் அஸ்ஸலயிய்யா கலாபீட மாணவர்களுக்கிடையே வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை( 25) ஸலயிய்யா வளாக மைதானத்தில் இடம்பெற்றது.

அல் இத்திஹாத், அந் நஸ்ர், அல் ஹிலால் என மூன்று இல்லங்களாக மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மஃஹத் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று பதக்கமும் கிண்ணமும் வழங்கும் இறுதி நிகழ்வில் தாஇராவின் நிர்வாகமும் சில அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முதலாம் இடத்தை அல் இத்திஹாத் இல்லமும், இரண்டாம் இடத்தை அல் நஸ்ர் இல்லமும், மூன்றாம் இடத்தை அல் ஹிலால் இல்லமும் பெற்றுக் கொண்டன.


(எம்.ஏ.ஏ.அக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *