புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான அறிவை பாடசாலையில் இருந்தே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; கனேமுல்லை ஹேமமாலியில் சஜித் பிரேமதாச
ஒரு நாடாக முன்னேற ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இது பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். வணிக முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புதிய படைப்பாளர்களுக்கு உரிய இடத்ததை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். புதிய தொழில் முயற்சியாண்மைகளை ஊக்குவிக்க சாதாரண செலவுகளுக்கான அணுகலைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். புதிய தொழில்முனைவோராக சமூகத்திற்குள் பிரவேசித்து, வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்களாக திகழும் வகையில் இதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 378 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, கணேமுல்ல, ஹேமமாலி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 25 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. பட்டப்படிப்பை முடித்தவுடன், அரச துறையில் வேலை தேடி, அரசியல் நட்புவட்டாரங்களை ஏற்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு பிள்ளைகளும் சொந்த காலில் நிற்பதற்குத் தேவையான தன்னம்பிக்கை மிக்க சூழலை உருவாக்கித் தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தடைந்துள்ள இந்த வேளையில், ஒவ்வொருவரும் நாட்டுக்கான தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். தகவல் தொழில்நுட்ப பாடம் தரம் 6-13 வரை மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தரம் 1-13 வரையிலான பாடமாக கட்டாயமாக்கப்பட்டு, ஆங்கில மொழி ஊடாக கற்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.