கல்பிட்டி அல் அக்ஸாவில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு…!
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையினைப் பிரதிநிதித்துவம் செய்து இம்மாதத்தில் இடம்பெற்ற பல்வேறுபட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கும் தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகிய மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றது.
அதற்கமைய வலயமட்ட ஒலிம்பியாட் (விஞ்ஞான) போட்டியில் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தம் 11 இல் கல்வி கற்கும் என்.எப். நிப்ராவினை பாடசாலை சமூகம் கொளரவித்திருந்தது. அதேபோல் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு பெருமை தேடி கொடுத்த மாணவர்களான உயர்தரத்தில் கல்வி கற்கும் எம்.ஐ.எப். ஆதிகா மற்றும் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் எம்.எஸ்.எம். அத்னான் ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோல் கோட்ட மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்று வலய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள பாடசாலையின் மாணவர்கள் கௌவிக்கப்பட்டனர். மேலும் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குற்பட்ட உதைப்பந்தாட்டத் தொடரில் மாகாணச் சம்பியன்களாக மகுடம் சூடி தொடராக இரண்டாவது முறையாக தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகிய உதைப்பந்தாட்ட அணியினைப் பிரதிநிதித்துவம் செய்த வீரர்களும் இந்நிகழ்வில் பதக்கம் மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழவ்வு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ரிஷ்வி ஹுசைன் – கல்பிட்டி)