மாகாண மட்ட மேசைப்பந்து (Table Tennis) போட்டியில் திருகோணமலை இந்து கல்லூரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேரியது கல்முனை ஸாஹிறா கல்லூரி..!
நீண்ட இடைவெளியின் பின்னர் இவ்வருடம் கல்முனை ஸாஹிறா கல்லூரியில் மேசைப்பந்து (Table Tennis) விளையாட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இம்மாதம் ஜுலை 23 மற்றும் 24 ம் திகதிகளில் திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டியில் 16 வயதிற்குட்பட்ட வயதுப் பிரிவில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் முதல் போட்டியில் திருகோணமலை இந்து கல்லூரியோடு விளையாடி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்ததோடு விளையாட்டு அறிமுகப்படுத்தி பங்கு பற்றிய முதல் வருடத்திலேயே எமது பாடசாலை காலிறுதி வரை முன்னேறியது.
இவ் அடைவிற்காக உறுதுனையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள், இவ்விளையாட்டை எமது பாடசாலையில் மீண்டும் அறிமுகப்படுத்தி பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் எம்.எச்.எம். முஸ்தன்சீரோடு, மாணவர்களை அழைத்துச் செல்ல உதவியாக இருந்த உடற்கல்வி ஆசிரியரான எம்.எம்.றஜீப் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு (SDEC) மற்றும் இந்த விளையாட்டுக்குத் தேவையான Table Tennis Board ஐ பெற ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
(யூ.கே. காலித்தீன்)