உலகம்

சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளது  இந்தியாவின் வளர்ச்சி பிரகாசத்துடன் காணப்படுகிறது நாட்டில் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது..!    -பாராளுமன்றத்தில் பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்தியாவில் விலைவாசி விகிதம் கட்டுக்குள் உள்ளது. எங்களுடைய அரசில் இளைஞர்கள் பெண்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளது. எனினும், இந்தியாவின் வளர்ச்சி பிரகாசத்துடன் காணப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது என்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் ஜனாதிபதியை சந்தித்தனர்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது ; பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில், எங்களுடைய கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டில் விலைவாசி விகிதம் கட்டுக்குள் உள்ளது. எங்களுடைய அரசில் இளைஞர்கள் பெண்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து நிலைத்தன்மையுடனும், 4 சதவீதம் என்ற இலக்கை நோக்கியும் பயணிக்கிறது. சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளது. எனினும், இந்தியாவின் வளர்ச்சி பிரகாசத்துடன் காணப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாடு, சிறு, குறு நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர் மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறோம். கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அரசின் இந்த திட்டத்தினால், 80 கோடி மக்கள் பயன் பெறுவார்கள்.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை அடிப்படையாக கொண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கரீப் அன்ன யோஜானா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதன் மூலம் 80லட்சம் கோடி பேர் பயன்.திறன் மேம்பாடு, சிறு, குறு நிறுவனங்கள், நடுத்தர வர்த்தகத்தினர் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறோம். 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ₹26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பீகார் மாநிலம் கயா பகுதியில் தொழில்த்துறை முனையம் அமைக்கப்படும். ஹைதராபாத் – பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம் தொடங்கப்படும். ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.இந்தியாவில் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும்.
நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படும்.
மாணவர்களை ஊக்குவிக்க உயர்க்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்.
இந்தியா முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை குடியிருப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்.உள்நாட்டில் உள்ள தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய திட்டம். புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திவாலான நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும். மாநில அரசு, வங்கிகளுடன் இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம். உள்நாட்டு உற்பத்தியில் 3.4% உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்க்கப்பட்டது. நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு மேலும் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.      பீகாரில் 2400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கப்பட்டது.  பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 25,000 ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.         வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் மறுகட்டமைப்பு மேற்கொள்ள நிதி வழங்கப்படும்.
புற்றுநோய் நோயாளிகளுக்கான மேலும் 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்களிப்படும். செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணு மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
வரிகள் சார்ந்த அறிவிப்புகள்: பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.
டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப் படுத்தப்படும்.
முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது.
நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.
புற்றுநோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது.2024-25 நிதியாண்டுக்கான மூலதன செலவினத்துக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு; 2024-25 நிதியாண்டிற்கான கடன் அல்லாத மொத்த வரவுகள் ரூ.2.07 லட்சம் கோடியாக மதிப்பீடு, மொத்த செலவு ரூ.48.21 லட்சம் கோடி, நிகர வரி வரவு ரூ.25.83 லட்சம் கோடி, நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% ஆக கணக்கீடு!புதிய வருமான வரி முறையில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி இல்லை. இணைய வழி வணிக நிறுவனங்களுக்கான TDS 0.1 சதவீதமாக குறைப்பு.புதிய வருமான வரி முறையில் வரி சலுகை பெறுவதற்கான நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு.தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சுங்கவரி குறைக்கப்படுவதால் தங்கம், வெள்ளி விலை குறைகிறது. தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டதற்கு ஒருமனதாக குரல் வாக்கெடுப்பில் மூலமாக நிறைவேற்றப்பட்டது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *