கொழும்பு ஜெயந்தி வித்தியாலய நிகழ்வில் சஜித் பிரேமதாச
தற்போது எமது நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பான்மையான மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து, வறுமையினால் அவதிப்பட்டு எல்லையற்ற அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது போயிருக்கின்றனர். இவ்வாறானதொரு யுகத்தில் நாடு என்ற ரீதியில் அனைவரும் கைகோர்த்து சரியான தீர்மானங்களையும், துணிச்சலான தீர்மானங்களையும், கடினமான தீர்மானங்களையும் எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் சார், முற்போக்கான சீர்திருத்தங்களின் சகாப்தத்திற்கு நாம் செல்ல வேண்டும். சீர்திருத்தங்களின் மாற்றங்களின் போது நாட்டின் பயணமானது சரியான கொள்கைகளை கொண்டமைவது முக்கியமானதாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 371 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன
கொழும்பு 14, ஜயந்தி வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 24 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
70 களில் பிரிட்டனில் மிகவும் இக்கட்டாண சூழ்நிலையை எதிர்கொண்டு, ஐரோப்பாவின் ஏழை என்று கூட அழைக்கப்பட்டாலும், பிரதமர் மார்கரெட் தாட்சர் தலைமைப் பொறுப்பை ஏற்று நாட்டில் தீர்க்ககரமான மற்றும் சரியான முடிவுகளை எடுத்தார். பொருளாதார மறுசீரமைப்புகளை முன்னெடுத்தார். நமது நாடும் தாட்சரின் புரட்சியில் படிப்பினைகளைப் பெற்று சரியான பாதையில் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் செய்ததை அப்படியே நாமும் செய்ய வேண்டிய தேவையில்லை. என்றாலும், அந்தத் திட்டத்திலிருந்து பாடம் கற்று, சமூக ஜனநாயக கொள்கையிலமைந்த மத்தியஸ்தமான வழியில் பயணிக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். உயர் வர்க்கத்தினர் மாத்திரம் இதன் பலனை ஈட்டுக் கொள்ளக் கூடாது. அதனை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சௌபாக்கியத்தை நோக்கி நகர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.