உள்நாடு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு

தேவை நிமித்தம் முன்னதாக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கட்டிடத்தினை திறந்து வைத்தார். முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி சராப்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம்.நௌஷாட் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *