ஜனாதிபதி தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபா விடுவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா விடுவித்து தேர்தல் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும் ஜனாதிபதி ரணில் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை நிதியமைச்சு மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கடந்து சில தினங்களுக்கு முன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.