ஹரீஸ் எம்.பியின் டி- 100 திட்டத்தின் கீழ் குடிவில் அரபா நகரில் பல்தேவைக் கட்டிடம்..!
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் குடிவில் அறபா நகர் ஹாஜியார் புறத்தில் பல்தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (21)அறபா நகரில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள டி- 100 வேலைத்திட்டத்தினூடாக இவ் பல்தேவைக்கட்டிடம் 5 மில்லியன் நிதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குடிவில் அறபா நகர் ஹாஜியார் புறம் பள்ளிவாசல் தலைவர் எம்.அனீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டினார்.
இந்நிகழ்வில் முன்னாள் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ நைசர்,இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான கட்சியின் உயர் பீட உறுப்பினர் என்.எம் ஆஸீக், எம்.எல் முஸ்னி, ஆசிரியர் எம்.ஜிப்ரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஆசிரியர் எம்.றியாஸ்,கட்சியின் அமைப்பாளர் எஸ்.எல் நிசார்,குடிவில் மத்திய குழு செயலாளர் எம்.சுபைத்தீன், வாங்காமம் பிரதேச கட்சியின் அமைப்பாளர் எம்.பர்கான்,குடியில் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.சுபைர்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாவா,கிராம சேவகர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியக்குழுவினர், வட்டார அமைப்பாளர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்,கிராம முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எம்.றம்ஸீன்)