உள்நாடு

மலையக மற்றும் பெருந்தோட்ட உழைக்கும் மக்களுக்கு சிறுநில தேயிலை தோட்டத்துக்கான உரிமையையையும், வீட்டுக்கான உரிமையையையும் பெற்றுத் தருவேன்..! -எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அண்மைக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் சகலரும் மலையக, பெருந்தோட்ட சமூகத்தை பொய்யான கூற்றுக்களாலும், வாக்குறுதிகளாலும் ஏமாற்றி வந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் லயன் அறை வடிவிலான இருப்பிடவசதிகளினாலான வாழ்க்கை முறையையும், தோட்டத் தொழிலாளர்கள் என்ற வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வருவோன். சிறிய தேயிலைத் தோட்டத்துக்கான உரிமையாளர்களாக்கி, தனது சொந்த தேயிலை தோட்டத்தில் தனக்கென சொந்த வீட்டை நிர்மாணித்து, தேயிலை தோட்டத்தை பராமரித்து, சிறுநில தேயிலைத் தோட்ட உரிமையாளராக தேயிலை உற்பத்திக்கு பங்களிப்பதற்கான வரத்தைப் பெற்றுத் தருவேன். நிறைவேற்றப்படாத பல தேவைகளையும், தரங்குன்றிய  வாழ்க்கை முறையையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். தேசிய நீரோட்டத்தில் அவர்களைச் சங்கமிக்கச் செய்வேன். அதனாலேற்படும் முன்னேற்றங்களால் பாராபட்சங்களை நீக்கி, செந்த காலில் நிற்கும் யுகத்தை பெருந்தோட்ட மக்களுக்கு உருவாக்கித் தருவேன் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 336 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன களுத்துறை, ஹொரண, இங்கிரிய விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 18 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நாட்டில், சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு  40% காணியே சொந்தமாக உள்ளன, ஆனால் அவை மொத்த தேயிலை உற்பத்தியில் 70% பங்களிப்பை வழங்கி வருகின்றன. அரசாங்கத்துக்கும், தனியாருக்குச் சொந்தமான 60% காணியை வைத்திருப்பவர்கள் தேயிலை உற்பத்திக்கு 30% பங்களிப்பையே செய்து வருகின்றனர்.

மலையக மற்றும் பெருந்தோட்ட சமூகங்களுக்கு செய்கைகள் மேற்கொள்ளப்படாத காணிகளைக் கொடுத்து அவர்களை வீட்டு உரிமையாளராகவும், தோட்ட உரிமையாளராகவும் மாற்றும் யுகத்தை நாம் உருவாக்கித் தருவோம். சில நன்மைகளை மட்டுமே அனுபவித்து வரும் இச்சமூகத்துக்கு நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவித்து வரும் பல நன்மைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய நிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

வீட்டுவசதி, கல்வி, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்றவற்றில் அபிவிருத்தியை ஏற்படுத்தி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பெருந்தோட்ட வறுமையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பேன். மலையக மற்றும் பெருந்தோட்ட மனித வளங்களின் இயலுமைகளையும் ஆற்றல்களையும் கட்டியெழுப்பி, நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை நல்குவோராக மாற்றும் நடவடிக்கையை முன்னெடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை பாடசாலை முறைமையை கட்டியெழுப்புவேன். இதற்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பேன். ஆசிரியர் பற்றாக்குறைக்கும், பௌதீக வளப் பற்றாக்குறைக்கும், மனித வளப் பற்றாக்குறைக்கும் தீர்வுகளை பெற்றுத் தருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *