டிரம்பை தோற்கடிப்பேன்; கமலா ஹரிஸ் உறுதி…!
அமெரிக்க தேர்தல் களத்திலிருந்து ஜோ பைடன் வெளியேறியதையடுத்து கமலா ஹரிஸ் டொனால்ட் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.
தற்போது கமலா ஹரிஸ் ஜனநாயக கட்சி முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.முழு ஜனநாயக கட்சி ஆதரவாளர்களையும் ஓரணியாகத் திரட்டி டிரம்பை
தோற்கடிக்க முழு வீச்சுடன் களமிறங்கப் போவதாகவும் அதற்காக அனைத்து தரப்பினரதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.