பிரான்ஸின் லெனி யொரோ மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்தார்
இங்கிலாந்தின் முன்னணி உதைப்பந்தாட்ட கழகமான மென்செஸ்டர் யுனைடெட்டில் தற்காப்பு ஆட்டக்காரராக பிரான்ஸின் 18 வயதான லெனி யொரோ 52 மில்லியன் பவுன் தொகைக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
தலைசிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களின் யொரொவும் ஒருவர் என மென்செஸ்டர் யுனைடெட் கழகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்ட 18 வயதான லெனி யொரோ ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழகத்தில் இணைவார் என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், அவர் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் கழகத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கமைய 5 ஆண்டுகால ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
16 வயதில் தமது கால்பந்து பயணத்தை தொடங்கிய யொரொ உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்டக் கழகமான மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி என குறிப்பிட்டார். மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு பகுதியை வலுப்பத்த யொரொவின் வருகை துணை புரியுமென அக் கழகத்தின் நிர்வாகி ஹெரிக் தெங் ஹெக் கூறியுள்ளார்.
(அரபாத் பஹர்தீன்)