உள்நாடு

ரிதிதென்ன இக்ரஃ பாடசாலைக்கு கத்தார் கல்குடா சமூக ஒன்றியத்தினால் (IKC-Q) கதிரைகள், அலுமாரி அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு..!

ரிதிதென்ன இக்ரஃ பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றம் கருதி பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் இக்ரஃ ஆசிரிய நலன்புரிச்சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கத்தார் கல்குடா சமூக ஒன்றியத்தினால் (IKC-Q) கதிரைகள், அலுமாரி அன்பளிப்புச்செய்யும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் பிரதி அதிபர் திருமதி எஸ்.எச்.எம்.ஜெஸீர், ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 40 கதிரைகளும் அலுமாரியும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன் போது IKC-Q அமைப்பு பற்றியும் அதன் மூலம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி, சமூக முன்னெற்றப்பணிகள் மற்றும் கத்தாரில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் அமைப்பின் தலைவர் எஸ்.சனூஸ் நளீமி இரத்தினச்சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அத்துடன், எமது வேண்டுகோளை முன்னிலைப்படுத்தி கஷ்டப்பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக இத்திட்டத்தை முன்னெடுத்து கதிரைகளையும் அலுமாரியையும் பெற்றுத்தந்தமைக்காக IKC-Q அமைப்புக்கும் நிதியுதவி செய்த மற்றும் இதற்காக உழைத்த அனைவருக்கும் பாடசாலைச்சமூகம் சார்பாக அதிபர் நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்.

அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதி அதிபர் திருமதி எஸ்.எச்.எம்.ஜெஸீர், IKC-Q அமைப்பின் தலைவர் எஸ்.சனூஸ் நளீமி, செயலாளர் ஐ.றணீஸ், நிருவாகப்பொறுப்பாளர்களான துவான் அஸ்ஹர், எம்.எம்.முஸம்மில், திட்ட இணைப்பாளர் எம்.ஜே.எம்.ஜெஸீர் மற்றும் இக்ரஃ ஆசிரிய நலன்புரிச்சங்கத்தின் தலைவர் ரீ.எல்.ஏ.ஷகி, பொருளாளர் வீ.ரீ.எம்.இர்ஷாத், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுச்செயலாளர் எச்.எம்.ஜெளபர் ஹுசைன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

 

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *