உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தை பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, தேர்தல்கள் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கும்போது, “சர்வஜன வாக்கெடுப்பு தவிர நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும்.

இதேவேளை, தேர்தல்கள் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில், சகல கட்சியின் செயலாளர்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *