உள்நாடு

புத்தளம் ஸைனப் ஆரம்பப் பாடசாலையின் கலைநிகழ்வுகளில் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பங்கேற்பு..!

புத்தளம் ஸைனப் ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் கடந்த 16ம் திகதி விமர்சையாக நடைபெற்ற நிலையில், வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன் போது ஸைனப் பாடசாலையின் வரவேற்பு வளைவுக்கான அடிக்கல் நிகழ்வும், மாணவர்களின் கலைவிழாக்களை துவக்கி வைத்தலும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து நிகழ்வில் கருத்து வௌியிட்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், பிள்ளைகளின் சிறுபராயம் மகிழ்ச்சிகரமானது. கல்விச் செயற்பாடுகள் அந்த மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அதற்கான வசதிகள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும்
சிறுபராயத்தில் மாணவர்கள் பெறும் சிறந்த கல்வியே எதிர்காலத்தில் நாட்டுக்கு நன்மை பயக்கும் நற்பிரசைகளை உருவாக்க அடித்தளமாக அமைகின்றது. அந்த வகையில் எல்லாக் குழந்தைகளுக்கும் சீரான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ​நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.

அதனையடுத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான விசேட பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணப் பொதிகளும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் அர்ஜுன, ஸைனப் ஆரம்பப் பிரிவு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *