உள்நாடு

காத்தான்குடி நகர சபைக்கு சுற்றுப்புற சூழலுக்கான  “ஜனாதிபதி விருது”..!

பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 11வது சுற்றுப்புறச் சூழலுக்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழவில் (Presedent Environment Awards – 2024) காத்தான்குடி நகர சபை வெண்கல விருதை (Bronze Award) வென்றெடுத்தது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையால் (Central Environmental Authority) நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இவ்வைபவத்தில் விருதுகளைப் பெற்றுக் கொண்டன.
தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இவ்விருதை கையகப்படுத்தியிருக்கும் காத்தான்குடி நகர சபையானது இவ்வெற்றிக்காக உழைத்த சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் முன்னாள் கௌரவ தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆகியோர் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றனர்.
(எம்.எம்.றம்ஸீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *