உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு..!

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணிக்கு பேருவளை மககொடை ஐ.எல்.எம் ஸம்ஸ_த்தீன் மகாவித்தியாலய மண்டபத்தில் கல்வி நிலைய ஸ்தாபகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்காத் தலைமையில் நடைபெறும்.
ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அஹமட் பின் அலி பின் ஸையித் அல் ரஷாதி பிரதம அதிதியாகவும் பலஸ்தீன நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹிஷாம் அபூ தாஹா விஷேட அதிதியாகவும் ஸம்ஸம் பவுண்டேசன் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.எச். முஹம்மத் ஹிஷாம் விஷேட பேச்சாளராகவும் கலந்து கொள்வர் என அப்ரார் கல்வி நிலைய பொதுச் செயலாளர் கலாநிதி மௌலவி எம். அஸ்வர் அஸாஹிம் (அல் அஸ்ஹரி) தெரிவித்தார். முன்னாள் முஸ்லிம் விவாக பதிவாளரும் மேற்படி கல்வி நிலைய தலைவருமான அல்ஹாஜ். எம்.ஜே.எம். நிசாம் ஜே.பியின் வழிகாட்டலின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதேச பாடசாளை அதிபர்கள், பாடசாலை அபிரிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், அப்ரார் கல்வி நிலைய உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொள்வர். சுமார் 50 மாணவர்களுக்கு நிகழ்வில் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேருவலையில் மருதானை மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் கல்வியில் பின்னடைவுக்கான காரணத்தை கண்டு பிடித்து ஆவண செய்யும் நோக்கத்தில் 2012. 05.19 ஆம் திகதி முன்னாள் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் அல்ஹாஜ். இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் ஊரில் கல்வித்துறை, மற்றும் பல்துறை சார்ந்த பிரமுகர்களை ஒன்று திரட்டி முதன் முதலாக பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பெரிய பள்ளியில் யுடீசுயுயுசு நுனுருஊயுவுஐழுN குழுருNனுயுவுஐழுN என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
இதட்கான நிதி முதன் முதலில் அன்னாரின் சகோதரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பின் போசகராக அல்ஹாஜ். இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் முதல் தலைவராக ஒய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்,
சமாதான நீதிபதி அல்ஹாஜ். ஏ.டப்லியு.எம் அஜ்வாத் அவர்களும், பொதுச்செயலாளாராக ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹ_ம் ஏ.எச்.எம் முர்சி அவர்களும் பொருளாளராக பிரபல மாணிக்க வியாபாரி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். உவைஸ் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

கடந்த பத்து ஆண்டுகள் தலைவர் பதவியை வகித்த ஏ.டப்லியு.எம் அஜ்வாத் வயது முதிர்ச்சி காரணமாக தலைவர் கதவியை விட்டுக் கொடுத்தார். பின்னர் ஓய்வு பெற்ற முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல் ஹாஜ் முஹம்மத் நிஸாம் தலைவராக நியமணம் பெற்றார். செயலாளர் பொருளாளர் பதவிகளில் காலகிரமத்தில் மாற்றங்கள் ஏட்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை விவசாய திணைக்கள விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தார் ஏ.ஜே.எம் ராஜி அவர்களும். பிரபல வர்த்தகர், சமாதான நீதிபதி அல்ஹாஜ். எம்.எஸ்.எம் இக்பால். அவர்களும் அலங்கரித்தார்கள்.

பொருளாளர் பதவியை ஒய்வு பெற்ற அதிபர், கணக்கியல் பட்டதாரி அல்ஹாஜ். எம்.எல்.ஏ அப்துல் அஹ்லா. அவர்கள் பொறுப்பேற்று அறிய பங்காற்றினார். பத்தாண்டு இறுதியில் புதிய நிறுவாக சபை தெரிவாகியது. தலைவராக முன்னாள் முஸ்லிம் விவாக பதிவாளர் அல்ஹாஜ். எம்.ஜே.எம். நிசாம் அவர்களும் பொதுச் செயலாளராக கலாநிதி மௌலவி அல்ஹாஜ். அஸ்வர் அசாஹிம் (அல் அஸ்ஹரி) அவர்களும். அவரின் துணை செயலாளராக அதிபர் பீ.எம் எம்.எம் ஜாபிர் அவர்களும் பொருளாளராக கணக்கியலாளர் அல்ஹாஜ். ஹலீம் ஏ அஸீஸ் அவர்களும் கல்விப் பண்ணிப்பாளராக பட்டதாரி ஆசிரியரும் கட்டடக் கலைஞருமான எம்.எச்.எம் இஹ்ஸான் பதவி ஏற்றுள்ளதுடன். அவர்களுக்கு துணையாக ஒரு பலம் வாய்ந்த நிறுவாக சபையும் அமைந்துள்ளது.

இந்த அமைப்பு பிரதேச பாடசாலைகளில் கற்று வறுமை காரணமாக இடை விலகிச் செல்லும் பிள்ளைகளில் திறமைசாலிகளான வர்களை பாதுகாத்து அவர்கள் தொடர்ந்து கற்று உயர் கல்வி பெற ஊக்குவிக்கும் வகையில் அவர்களை இனம்கண்டு அவர்களுக்கு மாதா மாதம் பணம் சார்ந்த புலமை பரிசில் வழங்கி வருகிறது. இதுவரை பல நுற்று க்கானக்கான மாணவ மாணவிகள் பலனடைந்து வருகின்றனர். பல மாணவியர் பட்டதாரிகளாக உருவாகி உள்ளதுடன். மேலும் பலர் சர்வ கலாசாலைகளில் கற்கை நெறியை தொடர்கின்றனர். இந்த செயல் பாட்டை தொடர்ந்து மேலும் இந்த பிரதேசத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தமது குடும்ப பொருளாதார முடை காரணமாக பல்கலைக்கழக செலவினங்களை ஈடுசெய்துகொள்ள முடியாமல் இருப்பது, சில மாணவர்கள் தொழிநுட்ப பாடநெறி களுக்கு விண்ணப்பித்து குடும்ப பொருளாதார கஷ்டம் காரணமாக தொடரமுடியாதவர்களாக இருப்பவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கும் உதவும் கைங்கரியத்தையும் வழங்கப்படும் புலமை பரிசிளுடன் தொடரும் பணியையும் புதிய நிறுவாகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களுக்கு மிலியன் கணக்கில் பணம் தேவைப்படுகின்றது. தொடர்ந்து உதவிவரும் பரோபகாரிகளுடன் மேலும் பலரின் பண உதவி மிகவும் இன்றியமைய வேண்டி உள்ளது. இது ஒரு அரசியல் மற்றும் இயக்க சார்பற்ற இஸ்லாமிய அமைப்பாகும். எளிய பிள்ளைகளின் கல்வி நலனிலும் பிரதேச முன்னேற்றத்திலும் கரிசனை உள்ள எவரும் இந்த அமைப்பில் இணைந்து தத்தமது பங்களிப்பை வழங்க வருக வருக என வரவேட்கப் படுகிறார்கள்.

 

(பேருவளை பீ.எம் முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *