உள்நாடு

திசைகாட்டி அரசாங்கமொன்றில் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எண்ணக்கரு யதார்த்தமாக மாறும். – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கின் மக்களும் கமக்காரர்கள், மீனவர், தோட்டத்தொழிலாளர்களும் கூறுவது மாற்றமொன்று ஏற்படவேண்டுமென்பதையாகும். இவ்விதமாக பயணிக்கமுடியாதென்றே கூறுகிறார்கள். இளைஞர் தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களும் மாற்றமொன்று அவசியமென்றே கூறுகிறார்கள். கம்பஹா மாவட்டத்தினால் தேசிய மக்கள் சக்தியுடன் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்திருப்பது அந்த மாற்றத்தை யதார்த்தமாக மாற்றிக்கொள்வதற்காகவே: வெற்றிகரமான மாற்றமொன்றை செய்வதற்காகவே.

மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்து 54 வருடங்களாகின்றன. ரணில் விக்கிரமசிங்க 47 வருடங்களாகின்றன. தினேஷ் 41 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்தார். இவர்கள் ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி, அமைச்சர் பதவிகளை வகித்தார்கள். நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்றார்கள். அந்த தோல்விகண்ட குழுக்களிடமிருந்து அதிகாரத்தை புதிய தலைமுறையின் கைகளுக்கு மாற்றவேண்டிய தேவை நிலவுகின்றது. அத்தகைய புதிய அரசியல் இயக்கமொன்றின் எழுச்சி, மலர்ச்சி ஏற்படுமென அவர்கள் நினைக்கவில்லை. இதுவரை காலமும் அவர்கள் ஆட்சிசெய்து வந்தார்கள்.

அவர்கள் திருட்டு, விரயத்தை புரிந்துவருகையில் அவர்கள் திருடுகிறார்கள், விரயம் செய்கிறார்கள் என்று நாங்கள் கூறுகிறோம். எனினும் அவர்கள் வழமைபோல் அவற்றையே புரிந்து வருகிறார்கள். தற்போது அதனை எதிர்க்கட்சிக்குத் தள்ளிவிட்டு தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கின்றது. ஏற்படப்போகின்ற இந்த மாற்றத்தை எளிதில் இடம்பெறக் கொடுக்கமாட்டார்கள். பல தசாப்தங்களுக்குப் பின்னர் அரசியல் நிலைமாற்றமொன்றுக்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. பழைய, தோல்விகண்ட அரசியல் தலைவர்களுக்குப் பதிலாக, புதிய அரசியல் தலைவர்கள், புதிய அரசியல் இயக்கத்தில் எமது நாடு பிரவேசிப்பதற்கான மாபெரும் வாய்ப்பு உருவாகி இருக்கின்றது.

இன்னும் இரண்டரை மாதங்கள் தான். இந்த இரண்டரை மாதங்களும் மல்லுக்கட்ட வேண்டும், உழைக்க வேண்டும். இந்த வெற்றியை பலம்பொருந்திய வெற்றியாக மாற்றிட, அதற்காக உழையுங்கள். நண்பர்களுடன் அன்பர்களுடன் பேசுங்கள். கலந்துபேசி பாரிய வெற்றியை பெற்றுத்தாருங்கள். இந்த தேர்தலின் முடிவுடன் இலங்கையின் அரசியலை புதிதாக எழுத நாங்கள் தொடங்குவோம்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் என்ன செய்யவேண்டும்? சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களாக இருக்கவேண்டும். முன்னேற்றமடைந்த ஒவ்வொரு நாட்டினதும் முன்னேற்றத்தின் பிரதான பண்பு யாதெனில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களாக இருப்பது. எமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானதெனில் பிரசன்ன ரணதுங்க, லொஹான் ரத்வத்தே பாராளுமன்றத்தில் இருக்கமுடியாது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் பாதுகாப்பினைப் பெறுகின்ற சட்டத்திற்கு மேலாக இருப்பவர்களாவர்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றில் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எண்ணக்கரு யதார்த்தமானதாக மாற்றப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களாக மாறாமல் எமது நாட்டில் குற்றச்செயல்களை படுகொலைகளை நிறுத்திவிட இயலாது. இந்த பாதாள உலகம் அவர்களிடமிருந்தே உருவாகியது. ‘கோனவல சுனில்’ ஒரு பெண் மீது வன்புணர்ச்சியில் ஈடுபட்டு சிறைக்குச்சென்ற பின்னர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மன்னிப்பு வழங்கி சமாதான நீதிவான் பதவியையும் வழங்குகிறார். பாதாளத்தை பாதுகாக்கிறார், வளர்த்தெடுக்கிறார். ‘சொத்தி உபாலி’ ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினை பிரதிநிதித்துவம் செய்கிறார். ‘பெத்தெகான சஞ்சீவ’ பாதாள உலகத் தலைவர். சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்புப் பிரிவின் பிரதானி.

இவ்வாறுதான் பாதள உலகம் வளர்ந்தது. அம்பாந்தோட்டைக்கு வம்பொட்டாவிற்கு சண்டியர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது மகிந்த ராஜபக்ஷவே. ‘ஜுலம்பிட்டியே அமரே’ நாமலுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். இந்த பாதாள உலகத்திற்கு பாதுகாப்பு வழங்கி, ஆயுதங்களை வழங்கி, எமது நாட்டை குற்றச்செயல் மலிந்த தேசமாக வளர்த்த்தெடுத்தவர்கள் இந்த அரசியல்வாதிகளே. ‘கடுவெல வசந்த’ இரத்தினபுரி அமைச்சர்களின் மடியிலேயே தவழ்ந்தார். குற்றச்செயல்கள் அற்ற, போதைபொருட்களற்ற, அனைவருமே உயிர் பற்றிய அவநம்பிக்கையின்றி வாழக்கூடிய நிலைமையை நாங்கள் உருவாக்குவோம்.

தற்போது லைசன் பெற்ற சண்டியர்களும் சைலன் பெறாத சண்டியர்களும் முட்டிமோத தொடங்கிவிட்டார்கள். இவ்விதமாக ஒரு நாடு முன்னேற முடியாது. சுதந்திரமும் அமைதியும் மிக்க நாடாக மாற்றப்படவேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே என்பதை உறுதியாகக் கூறுகிறோம். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முதுநிலை உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய பல உத்தியோகத்தர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கிறார்கள். அவர்களுடைய அறிவையும் மதியுரைகளையும் நாங்கள் இந்த பணிக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எங்களுடைய பொருளாதாரத்தில் பாரிய மாற்றமொன்று அவசியமாகும். இளைஞர் தலைமுறையினருக்கு போதியளவிலான வருமான வழிவகை கிடையாது. கிராமத்து இளைஞன் நல்ல தொழில், நல்ல காதல் தொடர்பு, நல்ல திருமணம், நல்ல வீடு வாசலை அமைத்துக்கொள்ள கனவு காண்கிறான். கிராமத்து இளைஞன் நல்ல மோட்டார் சைக்களில் பயணிப்பது எப்படி என கனவு காண்கையில் ஜனாதிபதியின் மைந்தர்கள் ரொக்கட் அனுப்ப கனவு காண்கிறார்கள். சாதாரண பிள்ளைகளின் கனவுகளை ஈடேற்றமுடியாத இராச்சியமொன்று உருவாகியிருக்கிறது. நிர்க்கதி நிலைமை அதன் விளிம்பிற்கே வந்திருக்கிறது.

இறுதியில் நாட்டை கைவிட்டுச் செல்வதை தவிர வேறு மாற்றீடு கிடையாதென சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் இளைஞன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள்ளே வரிசையில், கொரியன் மொழியை கற்பதற்காக வரிசையில் இருக்கிறார்கள். எங்களுடைய பெரும்பான்மை தலைமுறையினர் இந்த அனர்த்தத்திலிருந்து கரைசேர நாட்டை விட்டு வெளியேற நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இளைஞர்கள் என்ற வகையில் இதிலிருந்து தப்பியோட நினைக்கிறீர்களா? என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டுமென கோழைத்தனமான இளைஞர்களாக மாறப்போகிறீர்களா? அப்படியில்லாவிட்டால் இந்த சவாலை எதிர்கொண்டு அவற்றை வென்றெடுப்பதற்காக துணிச்சல் மிக்க இளைஞர் தலைமுறையினர் என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வருகிறீர்களா? நாங்கள் தெரிவு செய்து கொள்ளவேண்டியது இதனை மாற்றியமைப்பதற்காக மல்லுக்கட்டுவதேயாகும். இந்த மல்லுக்கட்டலின் பெறுபேறு வெற்றியடையுமானால் எம்மால் இந்த பொருளாதாரத்தை முற்றாகவே மாற்றியமைக்க முடியும்.

கொரியா செல்பவர்கள் அங்குள்ள அரச நிறுவனங்களில் வேலை செய்கிறார்களா? அங்கு அரசாங்கம் இடையீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கிறது. வெளியில் பாரிய பொருளாதாரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகள் நிலவுகின்றன. பாரிய ரீவி கைத்தொழில், போன் கைத்தொழில், கப்பல் கைத்தொழில், நிர்மாண கைத்தொழில், மேனிவனப்புக் கைத்தொழில் நிலவுகின்றன. எங்கள் பிள்ளைகள் அவற்றுக்குள்ளே தொழில் புரிகிறார்கள். எமது நாட்டில் அரசியல்வாதிகளின் தொழில்கள் என்பது பிரதேச செயலகங்கள், கச்சேரி, துறைமுகங்கள், பெற்றோலியத்தை நிரப்புவதாகும்.

எங்களுடைய இளைஞர்கள் 13,000 பேர் வரை மாலைதீவில் தொழில் புரிகிறார்கள். மாலைதீவில் மீன்பிடிக் கைத்தொழிலும் சுற்றுலா கைத்தொழிலும் மாத்திரமே இருக்கின்றது. பாரிய ஹோட்டல் கைத்தொழில் ஒன்று இருக்கிறது. அதற்கு அவசியமான சமையல்துறை வல்லுனர்கள், முகாமையாளர்கள் என்ற வகையில் எம்மவர்கள் சென்று வேலை செய்கிறார்கள். வெளியில் உள்ள பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டால் மாத்திரமே தொழில்கள் உருவாகும். தேசிய மக்கள் சக்தியைச் சோ்ந்த நாங்கள் வெளியிலுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அவசியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்.

எமது தொழில் முயற்சிகளை செய்பவர்கள் அரசியல்வாதிகளே. பார்கள், சாராய தொழிற்சாலை, பெற்றோல் செட் போட்டுள்ளவர்கள் அரசியல்வாதிகளே. பாணம, அறுகம்குடாவில் பெருமளவிலான காணிகள் அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருக்கின்றன. இன்று ஒட்டுமொத்த பொருளாதாரமும் அரசியல்வாதியின் பிடியில் சிக்கியுள்ளது. நானோ எங்கள் அரசியல் பீடத்தின் எவருமோ பார் போடுவதற்காக, பெற்றோல் செட் போடுவதற்காக, மணல் கரைசோ்ப்பதற்காக, சட்டவிரோத வெட்டுமரத் தீத்தொழிலை புரிவதற்காக, சுரங்கங்கள் வெட்ட வரப்போவதில்லை. அவை தொழில் முயற்சியாளர்களின் பணிகளாகும்.

இந்த சீரழிந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கனியவளங்கள் இருக்கின்றன. அந்த விஞ்ஞானிகளுடன் ஒன்றரை வருடங்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம். அங்கே எமக்கு வாய்ப்பு வழிவகை உண்டு. எம்மிடம் பாரிய காபன் சதவீதத்தைக் கொண்ட காரீயவளம் இருக்கிறது. பல தசாப்தங்களாக நாங்கள் காரீயத்தை மூலப்பொருளாகவே வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறோம் அதற்கு பெறுமதி சோ்க்கின்ற கைத்தொழிலொன்று அவசியமாகும்.

புல்மோட்டையில் கனிய மணலும் எப்பாவளவில் பொஸ்பேற் படிவும் இருக்கின்றது. நாங்கள் தொடக்கத்தில் பரந்தனில் சல்பூரிக் அமிலத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிப்போம். சல்பூரிக் அமிலம் அனைத்து கைத்தொழிலுக்கும் அவசியமாகிறது. அந்த இடத்திற்கு தொழில்நுட்ப வினைஞர்கள், எழுதுனர்கள், முகாமையாளர்கள், களஞ்சிய பொறுப்பாளர்கள் தேவைப்படுவர். அங்கே தொழில்கள் உருவாகும். அந்த இடத்திற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பிரதேசத்தில் நிலத்திற்கு அடியில் முக்கியமான சிலிக்கா படிவு இருக்கிறது. இவற்றை மூலப்பொருள்களாகவே ஏற்றி அனுப்புகிறார்கள். ஏற்றி அனுப்புகின்ற ஒவ்வொரு தொன்னுக்கும் ஒரு தொகை பணம் அமைச்சருக்கு வருகிறது.

இந்த வளங்களை பயன்படுத்தி புதிய கைத்தொழில் கட்டத்தை நோக்கி எமது நாட்டை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான மூலதனமும் தொழில்நுட்பமும் எம்மிடம் இல்லாதிருக்கலாம். அதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வருமாறு அழைக்கவேண்டும். உலகத்திலே சந்தை என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. அதில் நாங்கள் பிரவேசிப்பது கடினமானதாகும். மூலதனத்தை கொண்டுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள சந்தையில் வளங்கள் சகிதம் சங்கிலித் தொடரில் இருக்கின்ற ஒரு முதலீட்டாளரை நாங்கள் அழைப்பிக்க வேண்டும்.

எமது நாட்டுக்கு எந்தவொரு முதலீட்டாளரும் வருவதில்லை. 1978 தொடக்கம் 2022 வரை முதலீட்டாளர்களை வரவழைக்க எவ்வளவுதான் மல்லுக்கட்டி பார்த்தோம்.? எங்களுக்கு 44 வருடங்களுக்கு மேல் 22 பில்லியன் டொலர் தான் வந்தது. இப்போது எந்தவொரு பரிசுத்தமான முதலீட்டாளரும் வருவதில்லை. அவர் வந்த நேரத்திலிருந்து கப்பம் செலுத்த வேண்டும். காணிக்குச் செல்ல பிரதேச தலைவருக்கு, அமைச்சருக்கு கப்பம் கொடுக்க வேண்டும். நாங்கள் எந்தவொரு முதலீட்டாளரிடமிருந்தும் எதையுமே எதிர்பார்ப்பதில்லை.

எங்களுக்கு முக்கியமானதாக அமைவது அவர்கள் அந்நிய செலாவணி என்ற வகையில் எவ்வளவு தொகையை முதலீட்டாக கொண்டு வருகிறார்கள்? என்ன தொழிற்சாலையை ஆரம்பிக்கப்போகிறார்கள்? எங்களுக்கு அரச பங்காக எவ்வளவு கிடைக்கின்றது? எவ்வளவு தொழில்கள் பிறப்பிக்கப்படுகின்றன? கைத்தொழில்கள் விருத்தியடைந்ததும் வருடமொன்று எவ்வளவு டொலர் எடுத்து வருகிறார்கள்? நாட்டையும் மக்களையும் பற்றி மாத்திரமே நாங்கள் சிந்திப்போம்.

உலக நாடுகள் பாரிய கைத்தொழில் முறைமையில் பிரவேசிப்பதில் வெற்றியடைந்தாலேயே முன்னேற்றமடைந்தன. புதிய கைத்தொழிலாக்கத்திற்கு நாங்கள் செல்லவேண்டும். நாங்கள் பண்டங்களை உற்பத்தி செய்யவில்லை. உலகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்களை நுகர்ந்தோம். உலகம் கண்டுபிடித்துள்ள புதிய அறிவு, தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு புதிய பொருளாதார செயற்பாங்கிற்கு மாற்றுவதற்கான திட்டங்களை நாங்கள் ஆக்கியுள்ளோம்.

உலகத்தில் பாரிய ஆய்வுகூடங்களில் பணியாற்றிவருகின்ற எங்களின் விஞ்ஞானிகள் பாரிய பிரயத்தனம் செய்து ஆராய்ச்சிகளை நடாத்தி பாஸ்மதி நெல்லை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர் எங்கள் விவசாயக் குழுவிலுள்ள ஒரு விஞ்ஞானியாவார். உலகில் புற்றுநோயை முற்றாகவே ஒழித்துக் கட்டுவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முற்றாகவே புற்றுநோயை குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதென அண்மையில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த ஆய்வினை மேற்கொள்பவர் எங்களுடைய ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி கூறில் பணியாற்றுகின்ற எங்களுடைய விஞ்ஞானியாவார். எங்களுடைய கோழிக்கூட்டு வாழைப்பழத்தின் தோல் மெல்லியதாகும். அந்த தோலை பலப்படுத்துவது எவ்வாறு என ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இருக்கிறார்கள். புதிய ஆராய்ச்சிகள் எமது நாட்டுக்குத் தேவை. உலகம் முன்னோக்கிச் செல்வது புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய அறிவுடனேயேயாகும். உலகத்தை ஒரு காலகட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் அதிகமான கடற்படைப்பலத்தையும் பீரங்கி பலத்தையும் கொண்டவர்களாவர். அடுத்ததாக உலகத்தை ஆட்சி செய்தவர்கள் அதிக பண பலம் படைத்தவர்களாவர்.

படிப்படியாக நிகழ்கால உலகை கட்டுப்படுத்துபவர்கள் மிக அதிகமான தொழில்நுட்ப உடைமையைக் கொண்டுள்ள மிக அதிகமான புத்தாக்கங்களை கொண்டுள்ளவர்களாவார். எங்களுடைய நிறைவுகாண் மருத்துவ சங்கத்தின் இலங்கையில் மருத்துவ உபகரணங்களின் நிர்மாணிப்புக்கான பேற்றன்ட் (ஆக்கவுரிமைச் சான்றிதழ்) உரிமையைக் கொண்டுள்ள குழுக்களை நாங்கள் சந்தித்தோம். ஒரு நாடு முன்னேறிச் செல்லவேண்டுமானால் புதிய அறிவு புதிய உற்பத்திகள் அவசியமாகும். 2030 அளவில் 45 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் அவசியமாவர்.

இன்னும் ஆறு வருடங்களில் உலகத்திற்கு இரண்டு கோடி மென்பொருள் பொறியியலாளர்கள் தேவைப்படுவர். நாங்கள் அந்த சந்தையை கைப்பற்றவில்லை. உலக சந்தையில் மிகப்பெரிய மென்பொருள் பகுதியை இந்தியாவே கைப்பற்றியுள்ளது. எங்களுடைய புதிய தலைமுறையினருக்கு உலகில் உருவாகின்ற புதிய தொழில்நுட்ப மாற்றங்கள், உழைப்புச் சந்தை மாற்றங்களுக்கு நேரொத்ததாக அமையுத்தக்க வகையில் பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்கின்ற நாடாக இலங்கையை மாற்றியமைப்போம்.

இந்த மாற்றத்தை நாங்கள் ஓர் அரசியல் மாற்றத்துடனே ஏற்படுத்த வேண்டும். இன்னும் இரண்டரை மாதங்களே இருக்கின்றன. அதிகாரத்தை கையிலெடுத்த பின்னரே இந்த தொடக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். பழைய தோல்விகண்ட அரசியல் பயணத்திலிருந்தும் தோல்விகண்ட தலைமைத்துவத்திலிருந்தும் இந்த நாட்டை மீட்டெடுத்து புதிய திசையை நோக்கி மாற்றியமைப்போம். அதற்காக எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலை தீர்மானகரமான திருப்புமுனையாக மாற்றிக்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *