உள்நாடு

நிந்தவூர் மைமூனா காதர் எழுதிய ஒளிரும் முத்துக்கள் நூல் வெளியீடு

நிந்தவுர் மைமுனா காதர் செயினுலாப்தீன் (பண்டிதை) (ஓய்வு நிலை நல்லம்மா டீச்சர், அதிபர்) அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஸ்தாபகர் எழுதிய ”ஒளிரும் முத்துக்கள்” நுால் வெளியீடு நேற்று 18.07.2024 தெஹிவளையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் திலிப் நவாஸ் கலந்து கொண்டார் . நுாலின்முதற் பிரதியை இந் நுாலை வெளியிட்டாளரான காலாநிதி டாக்டர் இசட் எம் றபீக் தனது தாய் நுாலாசிரியை மைமுனா காதர் செயினுலாப்தீன் அவர்களிடம் கையளித்தார்.

அத்துடன் நுாலின் முதற் பிரதி நீதியரசர் திலிப் நவாஸ் மற்றும் குடும்ப உறுப்பிணர்களுக்கும் வழங்கி கொழும்பில் ஆரம்பி நிகழ்வாக துவக்கி வைக்கப்பட்டது.

இந் நுாலில் நிநதவுரில் பிறந்த வாழ்கின்ற் கல்வியில் ஏனைய துறைகளில் உயர்ந்த, சிறந்த சேவைகளாலும், உயர்ந்த நற்சாதனைகளாலும் நிந்தவூர் வரலாற்றில் சகல துறைகளிலும் தடம்பதித்துப் பிரகாசிக்கும் முத்துக்களின் படங்களுடன் அவர்களது தகவல்களும் நல்லம்மா டீச்சர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் நிழற் படங்களும் அடங்கியுள்ளன. சுமார் 1000 பக்கங்களைக் கொண்டது.

நுாலாசிரியை வயது 92 அவர் ஏற்கனவே எழுதி சேகரிக்க்ப்பட்ட தகவல்களை அவரின் மூத்த புதல்வர் கலாநிதி ரபீக் இந்தியாவுக்குச் சென்று இந் நுாலை பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் வெளியீட்டில் நுாலசிரியையின் ஏனைய புதல்வர்களான சாதிக், சபீக் சிரேஸ்ட ஊடகவியலாளர் சியாமுத்தீன் ஆகியோர்கள் மற்றும் குடும்ப உறுப்பிணர்களும் கலந்து சிறப்பித்தனர்.


(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *