எங்களுடன் எங்களை ஒப்பிடுவோம்…!
மற்றவர்களுக்கு என்னவெல்லாம் இருக்கின்றன, அவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்,அவர்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள், என்று நினைப்பதையும் கதைப்பதையும் நாம் அடியோடு மறந்து விடவேண்டும்.
நாங்கள் அவர்களின் காலணியில் நடக்கத் தேவையில்லை. நாங்கள் அவர்களுடன் எங்களை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால், எங்களால் ஒருபோதும் எங்கள் பாணியில் வசதியாக நடக்கமுடியாமல் போய் விடும். எனவே எங்களுக்கும் எங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கும் எது சிறந்தது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
எங்கள் சொந்த விடயங்கள் மீது முன்னுரிமை கொடுத்து எங்கள் நோக்கங்களை அடைய நாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவதானம் செலுத்த வேண்டும்.
நாங்கள் எங்கள் சொந்த நோக்கத்துடன் வசீகரிக்கப்பட்டால், மற்றவர்களுடன் எங்களை ஒப்பிடுவதற்கு நாங்கள் திசைதிருப்பப்பட மாட்டோம்.
(அஸ்ஹர் அன்ஸார்)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர், மனோதத்துவ எழுத்தாளர்.