உள்நாடு

சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்பாளராக மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!

காலி, பலப்பிட்டியவை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட புஹாரி முஹம்மது முஹம்மது அப்ராரி.JP, அவர்கள் இன்று (16/07/2024)மாவட்ட நீதிமன்ற நீதிபதி HMM. பஸீல் அவர்களின் முன்னிலையில் சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்பாளராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஊடகவியாளரான அப்ராரி நவமணி பத்திரிகையில் நீண்ட காலமாக பிரதேச நிருபராக கடமையாற்றிய இவர் 2001தொடக்கம்2006 ஆண்டு காலப்பகுதியில் பலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினராக செயற்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பலப்பிட்டிய மத்திய குழுவின் முன்னாள் தலைவராகவும் பொதுப்பணியாற்றிய இவருக்கு தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் “யௌவன அபிமானி”விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

“ரஞ்சன் விஜேரத்ன அகடமியில்” அரசியல் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்துள்ள இவர், வெளித்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், காத்தான்குடி தேசிய பாடசாலை, துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலயங்களில் தனது பாடசாலைக் கல்வியை கற்றுள்ளார்.

பலப்பிட்டய உள்ளூராட்சி மன்ற சபை உறுப்பினராக ஆற்றிய சேவைக்காக தென் மாகான சபையினால் 2007ஆம் ஆண்டு “கௌரவனிய சேவய” விருதும், காத்தான்குடி பிரதேச கலாச்சார சபை வழங்கிய “கலைச்சுடர்”விருதும், 2002 ம் ஆண்டு முதல் சமாதான நீதவானாக பொதுப்பணி யாற்றியமைக்காக இலங்கை சமாதான நீதவான்களின் பேரவையினால் “ கீர்த்தி ஸ்ரீ” “தேசபிமானி “ ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் பலப்பிட்டியவைச் சேர்ந்த மர்ஹும்களான புஹாரிமுஹம்மது லெப்பை(பேஷ் இமாம்),ஹதீஜா உம்மா ஆகியோரின் புதல்வருமாவார்.

 

(MSM.ஜஃபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *