கல்பிட்டி அல் அக்ஸாவின் முப்பெரும் நிகழ்வில் ஆளுநர் நசீர் அஹமட்டும், பா.உ அலி சப்ரியும் பங்கேற்பு.!
புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீமின் பனமுகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நுழைவாயலுக்கான அடிக்கல் நாட்டல், பாடசாலை உள்ளக பாதைக்கான அடிக்கல் நாட்டல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குல் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் நேற்று (16) இடம்பெற்றிருந்தது. நிகழ்வுகளில் பிரதம அதீதியாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் பங்கேற்றிருந்தார்.
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் நஸ்ரின் தலைமையிலும் பிரதி அதிபர் சாஜினாஸின் மேற்பார்வையின் கீழும் அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (16) அல் அக்ஸா தேசிய பாடசாலையில் மர்ஹும் தம்பி நெய்னா மரிக்கார் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ அலி சப்ரி ரஹீமின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நுழைவாயலுக்கான அடிக்கல் நாட்டல் இ பாடசாலை உள்ளக பாதைக்கான அடிக்கல் நாட்டல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குல் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக புத்தள மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் அழைப்பின் பேரில், வடமேல் மாகாண ஆளுநர் கெளரவ நசீர் அஹமட் கலந்து கொண்டார். அத்துடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விஷேட அதிதியாக கலந்து கொண்டதோடு கல்பிட்டி பிரதேச சபையின் முன்னால் தலைர் இன்பாஸ், முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் தாரிக் மற்றும் முன்னால் உறுப்பினர்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்ற குழு உறுப்பினர்கள மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் ஆளுநரிடம் பாடசாலை சமூகம் சார்பில் முன்வைக்கப்பட்ட பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை தேசிய மைதானத்தின் தரத்திற்குத் அபிவிருத்தி செய்து தரமுயர்த்தல் மற்றும் உயர் கல்விப் பிரிவின் முக்கிய பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களை பெற்றுக் தரல் போன்ற கோரிக்கைகளை ஆளுநர் நசீர் அஹமட் ஏற்று இவ் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ரிஷ்வி ஹுசைன் – கல்பிட்டி)