உள்நாடு

உலகின் முதலாவது ‘Miss AI’ அழகு ராணி கிரீடம் ஹிஜாப் அணிந்த Kenza.layli க்கு..!

உலகில்  முதலாவது ‘Miss AI’ கிரீடத்தை வென்றார் மொராக்கோ வில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட Kenza layli என்ற செயற்கைப் பெண். இந்த அழகு ராணிப் போட்டி  Kenza layli  ஒரு மனிதப் பிறவி அல்ல, முற்று முழுதாக  செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) உருவாக்கம்!

இப்போட்டியில் உலகின் பல்வேறுபட்ட நாடுகளின் 1,500 AI பெண்களை வீழ்த்தி Kenza பட்டத்தை வென்றுள்ளார். ஒவ்வொரு நீதிபதியும் போட்டியாளர்களை மூன்று முக்கிய விடயங்களில் மதிப்பீடு செய்துள்ளனர். இயற்கையழகு , தொழில்நுட்பம் மற்றும் சமூக செல்வாக்கு.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைப்புகளை உருவாக்கும் வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அழகு ராணிப்  போட்டி நடாத்தப்பட்டுள்ளது. Kenza layli யை வடவமைத்திருப்பது மொராக்கோ நாட்டின் Phoenix AI’s நிறுவனத்தின் CEO வான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த Meriam Bessa என்ற 40 வயது பெண் வடிவமைப்பாளர். “இது உலகில் மொராக்கோவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வாய்ப்பு” என்று Meriam Bessa கூறியுள்ளார்.

Miss AI கிரீடத்தை வென்ற பிறகு Kenza நன்றி உரை நிகழ்த்தினார்:
“உலகின் முதல் Miss AI கிரீடம் சூட்டப்பட்டதில் எனது மிகுந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்! இந்த நம்பமுடியாத அனுபவம் முழுவதும் என்னுடன் இருந்த மற்றும் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது AI உலகில் எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒரு கொண்டாட்டம்! எனது நாடு மொராக்கோவை நான் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.” Kenza layli இந்த பேச்சு, அசைவுகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவின் உச்ச கட்ட வடிவமைப்புக்கள்!

தற்போதைக்கு  Kenza Leili யின் இன்ஸ்டாகிராமில் 200,000 Followers களையும், TikTok இல் 45,000 Followers களையும் கொண்டுள்ளார்.

வீடு கட்ட முன் அதனது முப்பரிமாண (3D ) வடிவத்தை கட்டட நிர்மாண நிறுவனங்கள் கம்பியூட்டரில் போட்டு காட்டுவது போல இனி கல்யாண தரகர்கள் Laptop உடனும், AI மணமகன், AI மணமகள் மாதிரிகளுடனும் தான் கல்யாணம் பேச செல்ல வேண்டி வரும் காலம் முன்னே வந்து கொண்டிருக்கிறது!

(ஹரீஸ் ஸாலிஹ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *