உள்நாடு

நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர்..! -வடமேல் ஆளுநர் புகழாரம்

நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர் எனத் தெரிவித்த வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹ்மட், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கற்பிட்டி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொருட்களும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று (16) மாலை கற்பிட்டியில் இடம்பெற்றது.

இதில் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹ்மட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர் மேலும் கூறுகையில்,

கஷ்டமான ஒரு காலத்தில் யாருமே முன்வந்து நாட்டை பொறுப்பெடுக்க முடியாத ஒரு சூழ்நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரில் விக்ரமசிங்க மிகவும் தைரியமாக நாட்டை பொறுப்பெடுத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்த நாட்டை பாதுகாத்ததுடன், வரிசை யுகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளையும் அரவணைத்து, கடந்த இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் மக்கள் விரும்பக்கூடிய நல்ல ஆட்சியை உருவாக்கியிருந்தார்

நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாத்து, நாட்டு மக்கள் இன்று நிம்மதியாக வாழும் ஒரு சூழ்நிலையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்

எனவேமான், கட்டியெழுப்பிய நாட்டை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க, மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து அவருக்கு மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவருக்கு எந்த தேவையும் கிடையாது. ஆனால், இந்த நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய தேவை உள்ளது.

இதேவேளை, புத்தளம் மாவட்ட வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் ஆளுநரிடம் கேள்வி கேட்டனர் இதற்கு பதிலளித்த ஆளுநர்,

புத்தளம் நகரில் உள்ள வைத்தியசாலையை சகல வசதிகளுடன் கூடிய ஒரு வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். இதுபற்றி இன்று (16) புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதார அமைச்சருடன் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வடமேல் மாகாணம் சுற்றுலாத் துறையில் 2 வீதத்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. அமனை 10 வீதமாக அதிகரிக்க வேண்டிய நிலையில் அதற்குத் தேவையான சகல துறைகளிலும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அதில் வைத்தியாலை மிகவும் முக்கியமானதாகும். வைத்தியசாலைகளில் மக்களுக்கு மாத்திரமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் சுகாதார சேவையை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

எனவே, வடமேல் மாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்வதற்கான திட்டமிடல்களை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *