சுடராய் ஒளிர்ந்து கொண்டிருந்த தீபம் ஒன்று அணைந்து விட்டது; மனதில் ஏதோ இனம் புரியாத கவலை
நாங்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம்.. அழகான மெரூன் நிற பிடவையில் (ஸாரி) , கை நீள சட்டை அணிந்து வண்ணமாய் ஹிஜாப் அணிந்து , கையில் புத்தக அடுக்குடன் வந்து நின்றார். அன்று அவரை ரோல் மொடெல் ஆக நினைத்த தோழிகள் பலர்.. நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசினார்.. ஆங்கில பாட I.S.A ஆக எமது முன் அறிமுகப்படுத்தப்பட்டார்..
Very smart person.
மொடெல் பேப்பர் ஒன்றை அனைவருக்கும் கொடுத்து செய்வித்து சென்றார்.. அதன் பின் அவரை பெரிதாக சந்திக்கவேயில்லை..
பல வருடங்களின் பின், எமதூர் பாலிகா பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்று வந்தார்..
ஒரு ஆங்கில ஆசிரியராக,
ஒரு ஆசிரிய ஆலோசகராக, நாங்கள் அறிந்திருந்த அவர் துணிவும் , தைரியமும் , நிறையவே ஆற்றலும் மிக்க ஆளுமையாக எம்முன் வலம் வந்தார்.. எமதூர் நிகழ்வுகளில் அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
சியனே ஊடக வட்ட வருடப் பூர்த்தியில் பங்கு கொண்டு மாணாக்கருக்கு பரிசில் வழங்கி வைத்தார். நீண்ட நேரம் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். பெண்ணாளுமை அவர்…
Great personality.
கஹட்டோவிட்ட பொது மைதான திறப்பின் போது கஹட்டோவிட்ட பாலிகாவின் அதிபர் பதவியிலிருந்து சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
கல்வி, கலை, இலக்கியம், அறிவிப்பு, சமூகசேவை என பல்துறை ஆளுமையாக இருந்து
எழுத்தாளராக வளர்ந்து கவிதைகளை படித்து, வானொலி பேச்சாளராகவும் விளங்கினார். “புதையலைத் தேடி” எனும் கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.
மல்டி டாஸ்கர் போன்று எல்லாத் துறையிலும் மின்னிய அவர் நிறைந்த துணிவு கொண்டிருந்தார். சிறந்த தலைமைத்துவப் பண்பு கொண்டிருந்தார்.
சுடர் போல பிரகாசித்து சமூகத்திற்கு ஒளியூட்டக் காத்திருந்த அந்த தீபம் அணைந்துவிட்டது..
இன்னாலில்லாஹ்…
இறைவன் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக..!!
அவரது பணிகளை கபூல் செய்தருள்வானாக…!!
அவரது குடும்பத்தினருக்கு பொறுமையை வழங்குவானாக…!!
(பயாஸா பாசில்)