ஸம் ஸம் பெளண்டேசன் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு விளக்க செயலமர்வு
ஸம் ஸம் பௌன்டேசன் மதம் கடந்த மனிதம் என்ற நிறுவனத்தின் அனுசரனையில் கண்டி எலமல்தெனிய ஸம்.ஸம் பௌன்டேசனின் கண்டி பயிற்சிக் கல்லுாாியில் ஊடகவியலாளர்கள் 45 பேர் மட்டில் கலந்து கொண்ட ஒர் விளக்க் செயலர்வு ஞயிற்றுக்கிழமை 14ஆம் திகதி நடைபெற்றது.
இச் செயலர்மர்வில் கொழும்பு கண்டி பிரதேச ஊடகவிலாளர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இவ் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷேக் யூசுப் முப்தி, தலைமையில் நடைபெ்றறது. அத்துடன் பிரதான நிறைவேற்று அதிகாரி மொஹமட் ஹிசாம், ஊடக இணைப்பாளர் இன்பாஸ் சலாஹூத்தீன் ஆகியோர்கள் பின்வரும் தலைப்புக்களில் மற்றும் ஸம் ஸம் பவுண்டேசன் ஒர் சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனமாக அவர்கள் செய்யும் சேவைகளும் சம்பந்தமான விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டன இன மதங்களுக்கு அப்பால் இந்த நாட்டில் கல்வி, வாழ்வதாரம், வீடமைப்பு இன ஜக்கியம், பல்லின சமுகங்களுடனான ஜக்கியம் போன்ற துறைகளில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டன இந் நிறுவனம் கடந்த 15 வருடங்களாக இந் நாட்டில் சகல சமூகங்களுக்கும் தமது சேவைகளை செய்து வருகின்றது.
அத்துடன் ஊடகவியலாளர்கள் பற்றிய முன்னேற்றம் , வளர்ந்து வரும் இளைஞர்கள் யுவதிகள் ஊடகப் பயிற்றுவிப்புக்கள், பய்றிச்சிப் பட்டரைகளை நடாத்துதல் ஊடகத்துறை டிப்ளோமா போன்ற பயிற்சிகளை பயிலும் ஊடகவியலாளர்களுக்கு அவர்களது பயிற்சிநெறிகளுககு புலமைப் பரிசில் வழங்குதல் போன்ற தலைப்புக்களில் பலவேறு கருத்துக்கள் பறிமாறப்படடன.
அத்துடன் அஷ்ஷேக் யுசுப் முப்தி அவர்களினால் – இந்த நாட்டில் மட்டுமல்ல இந்த உலகிலும் ஊடகம் ஒர் சிறந்த ஆயுதம் ஊடகவியலாளர் ஒருவரின் பேனா மையினால் எழுதும் ஒர் வசனமும் ஒருவரை உயர்தவும் கூடும் அவரை இல்லாமல் செய்யும் பாம்பின் விசத்தை விட அவரின் பேனா மை வசனங்கள் பெரிதும் ஓர் ஆயுதம். ஆகவேதான் எமது சமுகத் தில் நிறைய ஊடகவியலாளர்கள் உருவாக வேண்டும் அதுவும் தற்பொழுது சமுக சேவை ஊடகததுறையில் நன்றாக பயிற்றப்பட்ட ஊடகவியலாளர்களை நாம் உருவாக்குதல் வேண்டும். எனவும அவர அங்கு உரையாற்றினார்.
(அஷ்ரப் ஏ சமத்)